Tuesday 5 June 2018

டத்தோஶ்ரீ நஜிப் எப்போது பிடிபடுவார்? உள்துறை அமைச்சர் பதில்

கோலாலம்பூர்-
முன்னாள் பிரதமர்  டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் எப்போது பிடிபடுவார், குற்றஞ்சாட்டப்படுவார் என்ற கேள்விக்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின், 1எம்டிபி, எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் விவகாரங்களை விசாரிக்கும் தரப்பினரிடமே முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என பதிலளித்தார்.

'அது இப்போது கிடையாது. அதனை விசாரிக்கும் அதிகாரிகளிடமே முழு பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.  இதன் தொடர்பில் அரசாங்கம் புதிய குழுவை அமைக்கலாம்.

1எம்டிபி, எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் ஆகியவை தொடர்பில் சட்டவிதிமுறைகளுக்கு ஏற்ப நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதற்கு அந்த குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார்.

எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனம் தொடர்பில்  மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கடந்த மே 24ஆம் தேதி  டத்தோஶ்ரீ நஜிப்பிடம் 7 மணி நேர விசாரணை மேற்கொண்டது.

இதில் 42  மில்லியன் வெள்ளி எஸ்ஆர்சி நிறுவனத்திடமிருந்து தனிபட்ட வங்கி கணக்குக்கு மாற்றப்பட்டது தொடர்பில் நஜிப்பிடம் விசாரணை  மேற்கொள்ளப்பட்டது.

இவ்விசாரணையின் தொடக்கத்தில் நஜிப்பின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் 120 மில்லியன் வெள்ளி ரொக்கம், 200 மில்லியன் வெள்ளி மதிப்புடைய தங்க நகைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பில் விசாரிக்கப்பட்டது.

No comments:

Post a Comment