Saturday 9 June 2018

இனி பூக்கள் மட்டுமே- பரிசுகளுக்கு தடை விதித்தார் துன் மகாதீர்

புத்ராஜெயா-
புதிய அரசாங்கத்தை அமைத்துள்ள பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள், அரசியல் செயலாளர்கள் பூக்களை பெற்றுக் கொள்ளலாம், இனி பரிசுகளை பெற கூடாது என பிரதமர் துன் மகாதீர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் திட்டமான 'பரிசுகள் இல்லா கொள்கை'யை அமல்படுத்தும் வகையில் இது மேற்கொள்ளப்படவுள்ளது. இதில் அரசு பணியாளர்களும் உள்ளடங்குவர்.
இனி பரிசுகளாக பூக்கள், உணவு, பழங்களை மட்டுமே அவர்கள் பெற்றுக் கொள்ள முடியும். இனி பரிசுகள் எதனையும் பெற்றுக் கொள்ள முடியாது. அவ்வாறு கொடுப்பதும் பெற்றுக் கொள்வது தவறானதாக கருதப்படும் என இன்று ஊழலுக்கு எதிரான அமைச்சரவை சிறப்புக் குழுவுக்கு தலைமையேற்றபோது அவர் இவ்வாறு சொன்னார்.
இந்த சிறப்பு குழுவில் மலேசிய ஒருமைப்பாட்டு கழகம், பொது புகார் பிரிவு, ஒருமைப்பாட்டு அமலாக்க ஆணைக்குழு நிறுவனம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

No comments:

Post a Comment