Sunday 10 June 2018

'பணம் மட்டும் போதும்'; நஜிப்பின் தப்புக்கணக்கு ஆட்சியை இழக்கச் செய்தது- பிரதமர் மகாதீர்

கோலாலம்பூர்-
'பணம் கொடுத்தால் போதும்; எளிதில் வெற்றி பெற்று விடலாம். பணம் தான்  "கிங்" என முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் தப்புக் கணக்கு போட்டு விட்டார். அதன் விளைவே ஆட்சியை இழக்க நேரிட்டது' என்று பிரதமர் துன் மகாதீர் முகம்மது சுட்டிக் காட்டினார்.

பணத்தை மூலதனமாகக் கொண்டு டத்தோஶ்ரீ நஜிப் பல்வேறு தவறுகளை இழைத்து விட்டார். ஆரம்பத்தில் பல அறிவுரைகளை வழங்கினேன். ஆனால் அது எடுபடவில்லை.

பணம் கொடுத்தால்  நமக்கான ஆதரவு இருக்கும்  என அவர் (நஜிப்) கருதினார். 'பணம்' மட்டும் எதையும் தீர்மானிக்காது. மனிதனின் உறுதியை விட பணம் ஒன்றும் வலிமையானது அல்ல.

மக்கள் எப்போது கோபம் கொள்கிறார்களோ அப்போது நீங்கள் எவ்வளவு 'பணம்' கொடுத்தாலும் அலட்டிக் கொள்ள மாட்டார்கள். கொடுப்பதை மக்கள் வாங்கி கொள்வார்கள்; ஆனால் அவர்கள் ஆதரவளிக்க மாட்டார்கள். அதுதான் நடந்து முடிந்த 14ஆவது பொதுத் தேர்தலில் நிகழ்ந்தது.

நஜிப் எவ்வளவு தான் பணம் கொடுத்தாலும் அது மக்களிடத்தில் அனுதாபத்தை ஏற்படுத்தவில்லை. மக்களுக்கு வேண்டியது நஜிப்பை வீழ்த்துவதே. நஜிப் வீழ்த்தப்பட்டால் 'பணம்' கிடைக்காது என்பதை மக்கள் உணர்ந்திருந்தும் அதை செய்துள்ளனர்.

ஏனெனில் அது நஜிப்பின்  பணம் கிடையாது. நேர்மையான வழியில் அது வரவில்லை என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர்.

அதன் விளைவாக மக்கள் நஜிப்பை வீழ்த்து மீண்டும் தன்னை அதிகாரத்தில் அமர வைத்துள்ளனர். என்னால் ஓய்வெடுத்துக் கொள்ள முடியும். ஆனால் என்னாள் கடுமையாக உழைக்க முடியும்  என்பதை உணர்ந்து மக்கள் என்னை மீண்டும் பிரதமராக பதவியேற்க வைத்துள்ளனர் என 'சினார் ஹரியான்'க்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில்  துன் மகாதீர் இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment