Tuesday 5 June 2018

211 ஆவது போலீஸ் தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு


புனிதா சுகுமாறன்

ஈப்போ-
போலீஸ் படையினர் மக்களுக்கு உற்ற நண்பனாக திகழ்வதோடு குற்றம் நடப்பதை தவிர்ப்பதிலும் மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதிலும் அவர்கள் முன் நிற்கின்றனர்.

மக்களுக்கான போலீஸ் படையின் சேவை அளப்பரியது என்பதில் எவ்வித  ஐயமும் கிடையாது என இங்குள்ள கல்லுமலை ஶ்ரீ சுப்பிரமணிய ஆலயத்தில்  அரச மலேசிய போலீஸ் படையின் 211ஆவது போலீஸ் தினத்தை முன்னிட்டு பேரா போலீஸ் படையின் இந்திய காவல்துறையின் ஏற்பாட்டில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டுக்கு பின்னர் போலீஸ் துறையின்  இந்திய உயர் அதிகாரி எஸ்.ஏ.சி. செல்வம் கூறினார்.

எந்நேரத்திலும் விழிப்புடன் செயல்பட்டு பொதுமக்களின் பாதுகாப்பு அயராது பாடுபடுவதில் போலீசாரின் உயர் பணி நிறைந்து கிடக்கிறது என அவர் சொன்னார்.

மேலும் இந்நிகழ்வில் அருட் பெரும் ஜோதி சிறார் பாதுகாப்பு இல்லத்தின் சிறுவர்களும் கலந்துக்கொண்டனர். காவல் துறையில் சேவையாற்றி வருபவர்களின் சார்பில் அருட் பெரும் ஜோதி இல்லத்திற்கு சிறப்பு நிதியை வழங்கினார் எஸ்.எ.சி செல்வம்.

இந்நிகழ்வில் காவல் துறையினரின் குடும்பத்தினர், பொதுமக்கள் , பிரமுகர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வில் முன்னாள் காவல் துறை அதிகாரிகள் மற்றும் நடப்பு அதிகாரியான எ.சி.பி ரவீந்திரன் எ.சி.பி. சுரேஸ் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment