புத்ராஜெயா-
மலேசியர்களின் வாக்களிக்கும் வயது வரம்பை 21இல் இருந்து 18ஆக குறைக்கும் பரிந்துரையை பிரதமர் துன் மகாதீர் முகம்மது முன்வைத்துள்ளார்.
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் 60 ஆண்டுகளாக ஆட்சி புரிந்த தேசிய முன்னணியை வீழ்த்துவதில் இளைஞர்களின் பங்கு அளப்பரியதாகும்.
இந்நிலையில் வாக்களிக்க தகுதி பெறும் வயது வரம்பு 21இல் இருந்து 18ஆக குறைப்பதன் மூலம் நாட்டின் ஆட்சி நிர்வாகத்தில் இளைஞர்களின் பங்கு ஆக்ககரமானதாக இருக்கும் என துன் மகாதீர் பரிந்துரைத்துள்ளார்.
அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகளில்கூட வாக்களிக்க தகுதி பெறும் வயது 18ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் நமது நாட்டில்தான் 21 வயதை எட்டியவுடன் ஒருவர் வாக்களிக்க உரிமை பெறுகின்றார்.
பிரதமர் துன் மகாதீரின் இந்த பரிந்துரையை பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் பலர் வரவேற்றுள்ளதோடு இத்திட்டம் இளைஞர்களிடமும் சிறந்த வரவேற்பை பெறலாம்.
No comments:
Post a Comment