Friday 8 June 2018

நீர் மின் அணைக்கட்டு திட்டம் ரத்து- சிவநேசன்


புனிதா சுகுமாறன்

ஈப்போ-
கோப்பெங், உலு குருந்தொங் அருகே மேற்கொள்ளப்பட்ட வந்த  நீர்மின்  அணை நிர்மானிப்பு பணி தற்காலிக ஒத்திவைக்கப்படுகிறது என பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் தெரிவித்தார்

இத்திட்டம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அனைத்துத் தரப்பினரின் அனுமதியை பெறும் வரையிலும் திட்டம் ஒத்திவைக்கப்படுகிறது.

கடந்த தேமு ஆட்சியின்போது 2012இல் தொடங்கப்பட்ட மின்நீர் அணைகட்டு திட்டம் கடந்த 6 ஆண்டுகளாக  மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அங்குள்ள பூர்வக்குடியினர் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக எதிர்ப்பு காட்டி வருகின்றனர்.

சுற்றுச்சூழல் பாதிப்பு, ஆறு மாசு அடைதல், முன்னோர்கள் கல்லறைகள் உடைக்கப்படுவது என இத்திட்டத்தினால் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருவதாக மக்கள் புகார் அளித்துள்ளனர்.

ஆற்றுப்பகுதிகள் அசுத்தம் அடைவதால் தங்களது சுற்றுலா வணிகமும் பாதிக்கப்படுவதோடு இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்திலும் மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய சிவநேசன், இவ்விவகாரம் தொடர்பில் அனைத்துத் தரப்பினருடமும் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்படும் என்றார்.

பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க மேம்பாட்டாளர்களும் ஒத்துக் கொண்டிருப்பதால் பேச்சுவார்த்தையில் ஒப்புதல் அளித்ததுபோல் நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும் என சிவநேசன் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment