Sunday 3 June 2018

நாட்டின் கடனை அடைக்க Spritzer, Yee Lee நிறுவனங்கள் வெ.1 மில்லியன் நன்கொடை


ஈப்போ- 
நம்பிக்கைக் கூட்டணி அறிவித்துள்ள 'தாபோங் ஹராப்பான் மலேசியா' திட்டத்திற்கு பேராவை அடித்தளமாகக் கொண்ட இரு பெரு நிறுவனங்கள்  1 மில்லியன் வெள்ளியை (10 லட்சம் வெள்ளி) நன்கொடையாக வழங்கின.

நாட்டின் கடனை அடைக்க தொடங்கப்பட்ட இத்திட்டத்திற்கு பல்வேறு தரப்பினர் நன்கொடை வழங்கி வரும் சூழலில் பேராவைச் சேர்ந்த Spritzer Bhd கனிம நீர் நிறுவனமும் Yee Lee Corporation Bhd எனும் சமையல் எண்ணெய் நிறுவனம்  தலா 5 லட்சம் வெள்ளியை நன்கொடையாக வழங்கியுள்ளன.

இன்று பேராக் ஜசெக அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது தைப்பிங் நாடாளுமன்ற உறுப்பினர் ஙா கோர் மிங்- இடம் நன்கொடைக்கான காசோலையை இவ்விரு நிறுனவ பிரதிநிதிகளிடம் வழங்கினர்.

நாட்டின் சிறந்த தலைமைத்துவத்திற்கும் ஆக்ககரமான திட்டத்திற்கும் துணை நிற்கும் வகையில் இந்த நன்கொடையை வழங்குவதாக Spritzer நிர்வாக இயக்குனர் லாம் செங், Yee Lee  பிரான்சிஸ் சோக் யின் ஃபாட் ஆகியோர் தெரிவித்தனர்.

14ஆவது பொதுத் தேர்தலில் ஆட்சியை கைப்பற்றிய பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி, நாட்டின் கடன் 1 டிரில்லியன் வெள்ளியாக உள்ளது என அண்மையில் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து சிலர் நன்கொடை முன்வந்த நிலையில் கடந்த 30ஆம் தேதி 'தாபோங் ஹராப்பான் மலேசியா' திட்டத்தை பிரதமர் மகாதீர் முகம்மது அறிவித்தார்.

No comments:

Post a Comment