Tuesday 5 June 2018

தனியார் துறைக்கான வெ.1,500 மாதந்திரச் சம்பளம்; ஆகஸ்டில் அறிவிக்கப்ப்படும்- மனிதவள அமைச்சர்

புத்ராஜெயா-
பக்காத்தான் ஹராப்பானின் தேர்தல் வாக்குறுதிக்கேற்ப தனியார் துறை ஊழியர்களுக்கான அடிப்படை மாதச் சம்பளம் 1,500 வெள்ளியாக  உயர்த்தப்படுவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் தெரிவித்தார்.

அமைச்சு, பல்வேறு தரப்பினர் ஆகியோரிடம் நடத்தப்டும் பேச்சுவார்த்தைக்கு பின்னர் தனியார் துறைக்கான இந்த புதிய சம்பள முறை  ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்படலாம் என இன்று மனிதவள அமைச்சு பணியாளர்களுடன் நடத்தப்பட்ட மாதாந்திர கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இவ்வாறு கூறினார்.

தேர்தல் கொள்கையில் அறிக்கையில் குறிப்பிடப்பட்டதை போல  அந்த மாதாந்திர சம்பளத்தை அமல்படுத்துவதை நடைமுறைப்படுத்துவோம். ஆனால் அதற்கு முன்னதாக அனைத்துத் தரப்பினரிடமும் கலந்துரையாடல் நடத்தப்படும்.

தொழிற்சாலை உட்பட அனைத்து நிறுவன பங்குதாரர்கள், தொழிலாளர் சங்கங்கள் ஆகியவற்றுடன் அரசாங்கமும் பங்கேற்கும் கலந்துரையாடல் நடத்தப்படும்.

இத்திட்டத்தை அமல்படுத்தும் முன்னர் அரசாங்கம் பலவற்றை கவனத்தில் கொள்ளவுள்ளது. இத்திட்டம் அமலாக்கம் செய்யப்படுவதால் பல்வேறு தொழிற்கூடங்கள் பாதிக்கப்பட்டு தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை நேர்ந்தால் அதில் எவ்வித பயனும் இல்லாமல் போய்விடும் என அவர் சொன்னார்.

தற்போது தீபகற்ப மலேசியாவில் 1,000 வெள்ளியாகவும் கிழக்கு மலேசியாவில் 920 வெள்ளியாகவும் தனியார் துறை ஊழியர்களுக்கு மாதாந்திர அடிப்படைச் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment