மைக்கா ஹோல்டிங்ஸ் உட்பட நஷ்டத்தை எதிர்நோக்கிய 100 மில்லியன் வெள்ளி மதிப்புடைய திட்டங்களில் முறைகேடு புரிந்த மஇகா தலைவர்களுக்கு எதிராக விசாரணை நடத்தப்படும் என மத்திய அமைச்சர் எம்.குலசேகரன் தெரிவித்தார்.
இவ்விவகாரத்தில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது என அவர் 'மலேசியா கினி' மேற்கொண்ட நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
'கொலை, நிதி முறைகேடு, ஏமாற்று, பித்தலாட்டம், ஆலயங்களில் தவறான நிர்வாகம், பண வெளியேற்றம் உட்பட பல்வேறு விவகாரங்களுக்கு விடை காணப்படும் என மனிதவள அமைச்சருமான அவர் சொன்னார்.
மலேசிய லஞ்ச ஒழிப்பு ஆணையம், சட்டத்துறை தலைவர் அலுவலகம், போலீஸ் ஆகியவை உரிய நடவடிக்கைகள் எடுக்கும் என உறுதியாக நம்புகிறேன்.
ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் இது முறையாக நடைபெறவில்லையென்றால் இவ்விவகாரம் அமைச்சரவைக் கூட்டத்திற்குக் கொண்டுச் செல்லப்படும். கடந்த காலத்தில் நிகழ்த்தப்பட்ட தவறுகளுக்கு இப்போது எத்தகைய தீர்வினை காண முடியும் என்பதை பொறுத்திருந்து காண்போம் என அவர் மேலும் கூறினார்.
1980ஆம் ஆண்டில் மைக்கா ஹோல்டிங்சை மஇகா தொடகியபோது அதில் ஏழ்மையிலான பலர் முதலீடு செய்தனர். 55,000 உறுப்பினர்களை கொண்ட மைக்கா ஹோல்டிங்ஸ் திட்டத்தில் 106 மில்லியன் வெள்ளி முதலீடு செய்யப்பட்டது.
ஆனால் இந்நிறுவனம் சரியாக நிர்வகிக்காத காரணத்தால் தோல்வி அடைந்ததோடு பாதிக்கப்பட்ட உறுப்பினர்களுக்கும் எவ்வித லாபமும் இல்லாமல் பணம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.
No comments:
Post a Comment