Sunday 17 June 2018

HRDF: வெ.30 கோடி மோசடி குற்றச்சாட்டு? சிறப்பு குழு ஆராயும்- அமைச்சர்


கோலாலம்பூர்-
மனிதவள மேம்பாட்டு நிதியத்தில் (HRDF)30 கோடி வெள்ளி மோசடி  செய்யப்பட்டுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில் உடனடியாக ஒரு முடிவுக்கு வந்து விட முடியாது. அது குறித்து நன்கு தெளிவுபெற வேண்டியிருக்கிறது என மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் குறிப்பிட்டார்.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் அந்நியத்தின் மூன்று இயக்குனர்கள் தங்களது பதவி விலகலை அறிவித்துள்ளனர்.  இது குறித்து முடிவெடுக்க சிறப்பு செயற்குழு அடுத்த வாரம் அமைக்கப்படும். இந்த மூன்று இயக்குனர்களின் பதவி விலகலை ஏற்றுக் கொள்வதா? இல்லையா? என்பதை செயற்குழுவுடன் கலந்தாலோசிக்கப்படும்.

மேலும், HRDF நிறுவன தலைமைச் செயல்முறை அதிகாரி டத்தோ சி.எம்.விக்னேஸ்வரனின் நிலை குறித்தும் அந்த செயற்குழு முடிவெடுக்கும். அந்த முடிவு அடுத்த வார இறுதியில் அறிவிக்கப்படும் என குலசேகரன் கூறினார்.

மனிதவள மேம்பாட்டு பயிற்சிகளுக்கான மனிதவள அமைச்சின் நிதியை நிர்வகித்து வரும் நிறுவனம்தான் மனிதவள மேம்பாட்டு நிதியம் (HRDF)  ஆகும்.

No comments:

Post a Comment