Saturday 16 June 2018

பிரதமரின் நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பு; 80,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

புத்ராஜெயா-
பிரதமர் துன் மகாதீர் முகம்மது தலைமையில் நடைபெற்ற நோன்புப் பெருநாள் கொண்டாட்ட நிகழ்வில் 80,000க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர்.

14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஆட்சியை கைப்பற்றிய பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியில் முதலாவது நோன்புப் பெருநாள் கொண்டாட்டம் பிரதமரின் அதிகாரத்துவ இல்லமான ஶ்ரீ புத்ரா பெர்டானாவில் நடைபெற்றது.

முஸ்லீம் அன்பர்களும் முஸ்லீம் அல்லாதவர்களும் திரளாக கலந்து கொண்ட பொது உபசரிப்பு குறித்து பேசிய துன் மகாதீர், 'இங்கு நோன்புப் பெருநாள் மட்டுமல்லாது வெற்றியும் கொண்டாடப்படுகிறது; இது மக்களின் வெற்றி' என அவர் சொன்னார்.

மாற்றத்தை ஏற்படுத்த விரும்பிய மக்களின் முயற்சியால் இன்று பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியமைத்துள்ளது. இந்த மக்கள் விரும்பிய ஆட்சி, பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு மக்களின் ஆதரவு வலுவாக உள்ளது என அவர் மேலும் சொன்னார்.

துன் மகாதீரின் துணைவியார் துன் டாக்டர் சித்தி ஹஸ்மா உட்பட உள்துறை அமைச்சர் டான்ஶ்ரீ முஹிடின் ஹாசின், தகவல் தொடர்பு, பல்லூடக அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment