கோலாலம்பூர்-
மோட்டார் சைக்கிளில் வந்த இரு ஆடவர்கள் 25 முறை துப்பாக்கி தோட்டாக்களை பிரயோகித்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என கோலாலம்பூர் குற்றவியல் விசாரணை பிரிவி தலைவர் ருஸ்டி முகமட் இசா தெரிவித்தார்.
இங்கு புக்கிட் பிந்தாங்கிலுள்ள பொழுதுபோக்கு மையத்தின் அருகில் நேற்று இரவு 10.50 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்திற்கு வர்த்தகம் தொடர்பில் ஏற்பட்ட புரிந்துணர்வு இல்லாமையும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதும் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பொழுதுபோக்கு மையத்திலிருந்து 30 மீட்டரில் உள்ள வாகன நிறுத்துமிட பகுதியில் 25 முறை துப்பாக்கி தோட்டாக்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளன. அச்சமயம் அந்த மையத்தின் நுழைவாயிலும் வரவேற்பரையிலும் பணியாளர்களே இருந்துள்ளனர்.
இச்சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என குறிப்பிட்ட அவர் மேலும் சொன்னார்.
No comments:
Post a Comment