Friday 15 June 2018

75% இந்தியர்களின் ஆதரவு பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கே- ஆய்வு முடிவு

கோலாலம்பூர்-
நடந்து முடிந்த 14ஆவது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு  70 முதல் 75 விழுக்காடு இந்திய சமுதாயத்தினர் ஆதரவு வழங்கியுள்ளனர்.

'மெர்டேக்கா சென்டர்' ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், இந்திய சமுதாயத்தின் ஆதரவு பக்காத்தான் ஹராப்பானுக்கு கூடுதலாக கிடைத்துள்ள நிலையில் 95 விழுக்காடு ஆதரவை சீன சமூகத்தினர் வழங்கியுள்ளனர்.
கடந்த 13ஆவது பொதுத் தேர்தலில் மக்கள் கூட்டணிக்கு  85 விழுக்காடு மட்டுமே ஆதரவு வழங்கிய சீனர்கள், இம்முறை 95% ஆதரவை வழங்கியுள்ளனர்.

இதில் மலாய்க்கார்கள் 25 - 30 விழுக்காடு ஆதரவை மட்டுமே பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு வழங்கியுள்ளனர். 35- 40 விழுக்காடு ஆதரவை தேசிய முன்னணிக்கும் 30 - 33 விழுக்காடு ஆதரவை பாஸ் கட்சிக்கும் மலாய்காரர்கள் வழங்கியுள்ளனர்.

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வென்றால் ஜசெகவின் அதிகாரமே மேலோங்கும் என தேசிய முன்னணி மேற்கொண்ட பிரச்சாரம் மலாய்காரர்கள் மத்தியுல் வலுவடைந்ததால் பக்காத்தான் ஹராப்பா கூட்டணிக்கான மலாய்காரர் ஆதரவு குறைந்தது.

ஜொகூர், மலாக்கா, நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களில் மலாய்காரர்களின் ஆதரவு முழுமையாக கிடைக்கப்பெற்ற நிலையில் கிளந்தான், திரெங்கானு ஆகிய மாநிலங்களில் மலாய்காரர்களில் ஆதரவு குறைந்து காணப்பட்டது என அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment