Saturday 9 June 2018

'தாபோங் ஹராப்பான்' திட்டத்திற்கு 3 நிறுவனங்கள் வெ.3.5 மில்லியன் நன்கொடை

ரா.தங்கமணி

ஈப்போ-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் ஆட்சியை கைப்பற்றிய பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி, நாட்டின் கடனை அடைக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளது.

1 டிரில்லியன் வெள்ளியாக  (1 லட்சம் கோடி) உள்ள நாட்டின் கடனை அடைக்க 'தாபோங் ஹராப்பான் மலேசியா' திட்டத்தை கடந்த மே 30ஆம் தேதி அறிவித்தார் பிரதமர் துன் மகாதீர்.

இத்திட்டத்திற்கு மக்களிடையே ஆதரவு பெருகியுள்ள நிலையில் பல்வேறு பெரு நிறுவனங்களும் நன்கொடை வழங்கி வருகின்றன.

அதன் அடிப்படையில் பேரா மாநிலத்தில் செயல்படும் மூன்று நிறுவனங்கள் ஒன்றிணைந்து 3.5 மில்லியன்  வெள்ளி நன்கொடை வழங்கின.
தியான் சியாங் (TIAN SIANG) நிறுவனம் 1 மில்லியன் வெள்ளி,  சூ பி மெட்டல் (CHOO BEE METAL)   நிறுவனம் வெ.500,000,கெய்லி ஹோல்டிங்ஸ் நிறுவனம் (CAELY HOLDINGS BHD) நிறுவனம் 2 மில்லியன் வெள்ளி ஆகியவற்றை வழங்கின. அதோடு ஹிலீர் பேரா சீன வர்த்தகர்கள் சபையின் சார்பில் 25,000 வெள்ளிக்கான காசோலையும் வழங்கப்பட்டன.

இன்று பேரா மந்திரி பெசார் முகமட் ஃபைசால் அஸுமு அலுவலகத்தில் நடைபெற்ற காசோலை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசிய முகமர் ஃபைசால், நாட்டின் கடனை அடைக்க ஒரு வாரத்தில் 50 மில்லியன் வெள்ளி எட்டியிருப்பது வரவேற்கக்கூடியாதாகும். அரசின் நல்திட்டங்களுக்கு மக்கள் உறுதுணையாக இருப்பர் என்பதை இது காட்டுகிறது.

ஏற்கெனவே இரு நிறுவனங்கள் 1.5 மில்லியன் வெள்ளியை வழங்கிய சூழலில், தற்போது மூன்று நிறுவனங்கள் 3.5 மில்லியன் வெள்ளியை வழங்குவது பாராட்டுக்குரியது ஆகும் என்றார்,

இதில் பேசிய பேரா ஜசெக தலைவர் ஙா கோர் மிங், நாட்டின் கடனை அடைக்க மலேசியர்களிடையே வலுபெற்றுள்ள நட்டுப்பற்றை கண்டு பிரமிப்பதாக சொன்னார்.

No comments:

Post a Comment