Friday 15 June 2018

சாலை பயணத்தில் கவனமாக இருங்கள்- வாகனமோட்டிகளுக்கு பேரா மந்திரி பெசார் அறிவுறுத்து

புனிதா சுகுமாறன்

ஈப்போ-
பெருநாள் காலங்களில் 80%  விபத்துக்கள் ஏற்படுவதற்கு காரணம் பயணிகளின் கவனகுறைவே  என்று பேராக் மாநில மந்திரி புசார் அஹ்மாட் ஃபைசால் அஸுமு கூறினார்.

நோன்புப் பெருநாளை கொண்டாட தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வோர் தங்களது பயணம் பாதுகாப்பானதாக அமைவதை உறுதி செய்ய வேண்டும்.

பெரும்பாலான விபத்துகளுக்கு கவனக்குறைவாக இருப்பதும் ஒரு காரணம் ஆகும். குறிப்பாக வாகனங்களில் பயணிக்கும்போது இருக்கை வார்பட்டையை அணிவதை வாகனமோட்டிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

குறிப்பாக, வாகனத்தின் முன் இருக்கையில் அமர்ந்திருப்பவர்களும் பின்னால் இருக்கையில் அமர்ந்திருப்பவர்களும் நிச்சயம் இருக்கை வார்பட்டை அணிய வேண்டும் என இன்று ஈப்போ டோல் சாவடியில் வாகனமோடிகளுக்கு நோன்புப் பெருநாள் அன்பளிப்பு வழங்கும் நிகழ்வின்போது செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இவ்வாறு சொன்னார்.

"உங்களது வருகையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் உறவினருடன் குதூகலமாக பெருநாளை கொண்டாடி மகிழ சாலை பயணத்தில் கவனம் செலுத்துங்கள்" என அஹ்மாட் ஃபைசால் அஸுமு வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment