Wednesday 30 June 2021

உதவி வேண்டுமா? வெள்ளை கொடியை ஏற்றுங்கள்


கோலாலம்பூர்-

கோவிட்-19 வைரஸ் தொற்று பாதிப்பினால் அமல்படுத்தப்பட்டுள்ள நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால் பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் வருமானம் பாதிக்கபட்டுள்ள மலேசியர்கள் தங்களின் அன்றாட தேவையை பூர்த்தி செய்ய சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

பிறரின் உதவிகள் கிடைக்காதா? என்ற ஏக்கத்தில் இருக்கும் மலேசியர்களுக்கு ஒரு தீர்வாக அமைந்துள்ளது வெள்ளை கொடி பிரச்சாரம். வறுமையில் சிக்கி தவிப்பவர்கள் தங்கள் வீடுகளில் வெள்ளை கொடியை ஏற்றினால் உதவும் நல்லுள்ளம் கொண்டவர்களால் அவர்களுக்கு உதவிகள் வந்து சேரலாம் எனும் எண்ணத்தில் வெள்ளை கொடி பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் வெள்ளை கொடி பிரச்சாரத்திற்கு ஆதரவு பெருகி வரும் நிலையில் வறுமையில் உள்ளவர்கள் நன்முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

Saturday 12 June 2021

செட்டி பாடாங் பெயர் நிலைநிறுத்தம்

ஷா ஆலம்-

அண்மைய காலமாக சர்ச்சையாக வெடித்திருந்த செட்டி பாடாங் விவகாரத்தில் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் முயற்சியில் அப்பெயர் நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்று கணபதிராவின் சிறப்பு அதிகாரி ரா.ஆனந்தன் தெரிவித்தார்.

இந்திய வணக சமூகமான செட்டி சமூகத்தின் அடையாளமாக திகழும் கிள்ளான் செட்டி பாடாங் இந்நாட்டு சமூகத்தின் வரலாற்றுச் சின்னமாக திகழ்ந்து வருகிறது.

சுற்றுலா தலமாக உருவாக்கம் காணும் Royal Klang Town Heritage Walk என அழைக்கப்படும்  வரலாற்று முனையத்திற்காக செட்டி பாடாங் பெயரை மாற்றம் செய்வதற்கான நடவடிக்கையை கிள்ளான் நகராண்மைக் கழகம் முன்னெடுத்தது. அதற்கு இந்திய சமுதாயத்தின் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் கணபதிராவ் முயற்சியில் செட்டி பாடாங் பெயர் நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்று ஆனந்தன் கூறினார்.

செட்டி பாடாங் பெயரை நிலைநிறுத்த முயற்சியை முன்னெடுத்த சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அமிருடின் சாரி, கணபதிராவ் ஆகியோருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.


பூ விற்பனைக்கு அனுமதி - டத்தோஶ்ரீ சரவணன்

கோலாலம்பூர்-

நாட்டில் அமல்படுத்தப்பட்ட முழு முடக்கத்தினால் முடங்கி போன பூ விற்பனை தொழில்துறை மீண்டும் செயல்படுவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது என்று மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற தேசிய பாதுகாப்பு மன்றத்துடனான சந்திப்புக் கூட்டத்தில் பூ விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டது என்று கூறிய டத்தோஶ்ரீ சரவணன், கேமரன் மலை பூ உற்பத்தியாளார்கள் உட்பட இதர பூ உற்பத்தியாளர்களும் விற்பனையாளர்களும் விவசாயம், மூலப்பொருள் தொழில்துறை அமைச்சின் அலுவலகத்தின் அனுமதி கடிதத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர் சொனார்.

ஜூன் 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட முழு முடக்கத்தின் காரணமாக பூ விற்பனைக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் பூ உற்பத்தியாளர்களும் விற்பனையாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

ஆலய வழிபாட்டிற்கும் வீட்டில் சமய நிகழ்வுகளுக்கும் பூக்கள் அவசியமானது எனும் நிலையில் பூ விற்பனைக்கு அனுமதி தர வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் டத்தோஶ்ரீ சரவணன் முயற்சியில் பூ வியாபாரிகளின் வாழ்வில் ஒளியேற்றப்பட்டுள்ளது.


அம்னோவிலிருந்து ஹிஷாமுடின் நீக்கமா?

கோலாலம்பூர்-

வெளியுறவு அமைச்சர் டத்தோஶ்ரீ ஹிஷாமுடின் துன் உசேன் அம்னோவிலிருந்து நீக்கப்பட்டதாக வெளியான தகவலை அக்கட்சி மறுத்தது. டான்ஶ்ரீ முஹிடினுக்கு பதிலாக டத்தோஶ்ரீ ஹிஷாமுடின் பதவியேற்கவுள்ளதாக நேற்று தகவல் உலாவி கொண்டிருந்த நிலையில் அவர் செம்புரோங் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக போலியான கடிதம் சமூக ஊடகங்களில் வைரலானது.

இந்நிலையில் அம்னோவின் உச்சமன்றக் கூட்டம் நேற்று நடைபெறாத நிலையில் டத்தோஶ்ரீ  ஹிஷாமுடினை கட்சியிலிருந்து எவ்வாறு வெளியேற்றிருக்க முடியும் என்று அம்னோ வட்டாரம் கேள்வி எழுப்பியுள்ளது.


உதவித் திட்டங்களை துரிதப்படுத்துக- டத்தோஶ்ரீ நஜிப்

கோலாலம்பூர்-

இன்னும் இரு வாரங்களுக்கு முழு முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களுக்கான உதவித் திட்டங்களை பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் துரிதப்படுத்த வேண்டும் என்று முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் வலியுறுத்தினார்.


ந்த முழு முடக்க காலத்தில் மக்கள் சிரமங்களை எதிர்கொள்ளாமல் இருக்க ஐ-சினார், ஐ-லெஸ்தாரி போன்ற திட்டங்களை மீண்டும் அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்று வலுயுறுத்திய நஜிப், மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதில் அரசாங்கம் மெத்தனப்போக்கை கடைபிடிக்கக்கூடாது என்றார்.


Friday 4 June 2021

DMPK பெயர் பலகை அகற்றம்

கிள்ளான் -

கிள்ளானில் வரலாற்றுப்பூர்வ  இடமாக விளங்கி வரும் செட்டி பாடாங்-ஐ Dataran Majlis Perbandaran Klang என மாற்றுவதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததன் விளைவாக அங்கு பொருத்தப்பட்டிருந்த பெயர் பலகைகள் அகற்றப்பட்டன.

இந்திய வணிக சமூகமான செட்டி சமூகத்தின் வரலாற்று தடமான இது அழிக்கப்பட்டு விடக்கூடாது எனும் நோக்கில் செட்டி பாடாங்கிற்கு படாங்கிற்கு பதிலாக டத்தாரான் செட்டி என பெயர் மாற்றம் செய்யப்படலாம் என சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் முன்மொழிந்த பரிந்துரை ஆட்சிக்குழு உறுப்பினர்கள் வரவேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


செட்டி பாடாங்-ஐ காக்க அரசியல் பேதங்களை கடந்து ஒன்றிணைவோம்

ஷா  ஆலம்- 

கிள்ளான் பாடாங் செட்டி வரலாற்று தடத்தை பாதுகாப்பதில் அரசியல் பேதங்களை கடந்து அனைத்துத் தரப்பினரும் ஒருமித்த கருத்துடன் ஒன்றிணைய வேண்டும் என்று மலேசிய இந்தியர் குரல் இயக்கத்தின் பொதுச் செயலாளர் ரா.ஆனந்தன் வலியுறுத்தினார்.

இந்திய சமூக வணிகமான செட்டி சமூகத்தின் 100 ஆண்டுகால வரலாற்றை கொண்டுள்ள செட்டி பாடாங் பெயர் மாற்றப்படுவது தற்போது சர்ச்சையாக உருவெடுத்துள்ள நிலையில் செட்டி பாடாங்-ஐ 'டத்தாரான் செட்டி' என பெயர் மாற்றத்தை முன்மொழிந்துள்ள சிலாங்கூர்  மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவின் பரிந்துரையை மலேசிய இந்தியர் குரல் வரவேற்கிறது.

அதே வேளையில் ஒட்டுமொத்த இந்திய சமுதாயமும் செட்டி பாடாங் வரலாறு நிலைபெற்றிட அரசியல் பேதங்களை கடந்து இந்தியர் என்ற ஒருமித்த உணர்வுடன் ஒன்றிணைய வேண்டும் என்று ஆனந்தன் வலியுறுத்தினார்.


சாலை வாகனங்கள் அதிகரிப்பு

 கோலாலம்பூர்-

நாட்டில் முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டிருந்தாலும் இன்னமும் சாலைகளில் அதிகமான வாகனங்களை காண முடிகிறது என்று தற்காப்புக்கான முதன்மை அமைச்சர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

ஜூன் 1ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட முழு முடக்கத்தின் 4ஆவது நாளான இன்றும் கூட பெரும்பாலானோர் இன்னமும் வெளிநடமாட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். இதனை கட்டுப்படுத்தும் வகையில் சோதனை சாவடிகள் அதிகப்படுத்தப்படும் என்று அவர் மேலும் சொன்னார்.


மக்களின் பிரச்சினைகளை விவாதிக்க நாடாளுமன்றத்தை கூட்டுக

கோலாலம்பூர்-

மக்களின் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க  நாடாளுமனறம் கூட்டப்பட வேண்டும் என்று பிகேஆர் கட்சியின் ஆலோசகர் டத்தோஶ்ரீ வான் அஸிஸா வான் இஸ்மாயில் வலியுறுத்தினார்.

கோவிட்-19, பாலஸ்தீன தாக்குதல் உட்பட நாட்டு மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம், கல்வி, வேலையின்மை, சமூகநலன் போன்ற பல்வேறு பிரச்சினைகள் விவாதிக்கப்பட வேண்டியுள்ளது. நடப்பிலுள்ள அவசர கால சட்டத்தை நாடாளுமன்றத்தை இன்னமும் முடக்காமல் நாடாளுமன்றக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று அவர் சொன்னார்.


தடுப்பூசியை கட்டுமாக்குங்கள்- பிரதமர் பரிந்துரை

 


கோலாலம்பூர்-

நாட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் இலக்கை எட்டுவதில் தாமதம், அல்லது தோல்வி ஏற்பட்டால் மக்களுக்கு தடுப்பூசியை கட்டாயமாக்குவதை பரிசீலிக்கும்படி பிரதமட் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் கோவிட் கையிருப்பை உறுதி செய்யும் செயற்குழுவிடம் பரிந்துரைத்துள்ளார்.

கோவிட் தடுப்பூசியை ஒரு தரப்பினருக்கு செலுத்தி விட்டு மற்றொரு தரப்பினர் அதை எடுத்துக் கொள்ளாவிட்டால்  கோவிட்-19 பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சிக்கு எவ்வித பலனையும் கொண்டுவராது என்று அவர் சொன்னார்.


6 லட்சத்தை தொட்டது கோவிட்-19 பாதிப்பு


கோலாலம்பூர்-

நாட்டை உலுக்கி வரும் கோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்துள்ளது. இந்த பெருந்தொற்றுக்கு இன்று புதிதாக 7,748 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 603,122ஆக பதிவாகியுள்ளது. கோவிட்-19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் சிலாங்கூர் மாநிலம் தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது.


Thursday 3 June 2021

செட்டி பாடாங்-க்கு பதில் டத்தாரான் செட்டி' என பரிந்துரை

ஷா ஆலம்-

நாட்டில் தற்போது சர்ச்சையாக  உருவெடுத்துள்ள செட்டி பாடாங் விவகாரத்தில் நிரந்தர தீர்வு காணும் வகையில் செட்டி பாடாங் என்பதை டாத்தாரான் செட்டி என  மாற்றுவதற்கு பரிந்துரை செய்துள்ளதாக சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார்.

இந்திய வணிக சமூகத்தின் அடையாளமாக திகழும் செட்டி சமுகத்தின் பங்களிப்பை உணர்த்தும் செட்டி பாடாங்கை அழிப்பதற்கு கிள்ளான்  நகராண்மைக் கழகம் முயற்சிக்கிறதா?

2008ஆம் ஆண்டுக்கு முன்பே இத்தகைய முயற்சிக்கு தேசிய முன்னணி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

2015 இல் மீண்டும் இந்த விவகாரம் எழுந்தபோது கோத்தா அலாம் ஷா  சட்டமன்ற உறுப்பினராக இருந்த நானும் கிள்ளான் நகரக் கழக உறுப்பினராக இருந்த யுகராஜாவும் சேர்ந்து எதிர்ப்பு தெரிவித்தோம். அதனால் அத்திட்டம் பின்னர் கைவிடப்பட்டது.

இப்போது மீண்டும் அந்த விவகாரத்தை கையிலெடுத்துள்ள கிள்ளான் நகராண்மை கழகத்தின் உள் நோக்கம் தான் என்ன? 

இவ்விவகாரம் தலைதூக்க விடாமல் இருப்பதற்கு ஏதுவாக செட்டி பாடாங்-ஐ இனி  டத்தாரான் செட்டி  என மாற்றுவதோடு அதனை ஆவணப்படுத்தும் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று ஆட்சிக் குழுக் கூட்டத்தில் பரிந்துரைத்தேன். அதற்கு ஆட்சிக்குழு  உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர் என்று கணபதிராவ் மேலும் சொன்னார்.

Wednesday 2 June 2021

எம்40 பிரிவினருக்கு உதவித் திட்டங்கள் எங்கே? நஜிப் கேள்வி

 கோலாலம்பூர் -

எம்40 பிரிவைச் சேர்ந்த வர்க்கத்தினருக்கு அரசாங்கம் வழங்கியுள்ள புதிய திட்டங்கள் என்ன என்று முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கேள்வியெழுப்பியுள்ளார்.

நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள முழு முடக்கத்தை அடுத்து பிரதமர் உதவி நிதி திட்டங்களில் எம்40 பிரிவினர் விடப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

5000 வெள்ளிக்கும் அதிகமான குடும்ப வருமானம்  கொண்ட எம்40 பிரிவினருக்கு பிபிஆர் நிதி, ஐ-லெஸ்தாரி, ஐ-சினார், மின்சார கழிவு, ஆஸ்ட்ரோ கட்டண கழிவு என எவ்வித உதவி திட்டங்களையும் நடப்பு அரசாங்கமான பெரிக்காத்தான் நேஷனல் வழங்கவில்லை என்று டத்தோஸ்ரீ நஜிப் குற்றஞ்சாட்டினார்.

வங்கி கடன் ஒத்திவைப்பு: பி40 பிரிவினர் பயனடைவர்

கோலாலம்பூர் -

பந்துவான் பிரிஹாத்தின் ரக்யாட் எனப்படும்  பிபிஆர்  உதவி திட்டத்தில் பதிந்து கொண்டுள்ள பி40  பிரிவைச் சேர்ந்த வர்க்கத்தினர் அனைவருக்கும் மூன்று மாத வங்கி கடன் கட்டணம் ஒத்திவைப்பு சலுகையை பெறுவர் என்று வங்கிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள முழு முடக்கத்தை அடுத்து பிரதமர் அறிவித்த உதவி  திட்டங்களில் வங்கி கடன் செலுத்தும் காலகட்டம் மூன்று மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதில் 40 பிரிவைச் சேர்ந்த வர்க்கத்தினரும் வேலையை தற்காலிகமாக இழந்துள்ளவர்களும் பயன் அடைவர் என்று அந்த சங்கம் தெரிவித்துள்ளது

ராணுவ பயிற்சி மட்டுமே


கோலாலம்பூர் -

மலேசியாவின் வான் எல்லைக்குள் நுழைந்த சீனாவின் 16 ராணுவ  விமானங்கள் பயிற்சி நடவடிக்கை மட்டுமே இடம்பெற்றுள்ளன என்றும் எந்த ஒரு நாட்டையும் உளவு பார்க்கும் வேலையில் ஈடுபடவில்லை என்றும் சீன தூதரக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இந்நடவடிக்கை சீனாவின் வான் படை வீடியோ போக்குவரத்து பயிற்சி திட்டங்கள் அது அமைந்துள்ளது என்றும் எந்த ஒரு நாட்டின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமையவில்லை என்பது தனக்கு தெரியும் என்றும் அவர் சொன்னார்.

விளக்கம் பெறப்படும்- ஹிஷாமுடின்

புத்ராஜெயா-

மலேசியாவின் வான் எல்லையில் சீனாவின் ராணுவ விமானங்கள் கடந்தது தொடர்பில் விளக்கம் பெறப்படும் என்று வெளியுறவு துறை அமைச்சர் ஹிஷாமுடின் துன் உசேன் தெரிவித்தார்.

பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறப்படும் சீனாவின் ராணுவ விமானங்கள் மலேசியாவின் வாழ் எல்லையை நேற்று கடந்துள்ளன .

நாட்டின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இவ்விவகாரம் தொடர்பாக முழுமையான விளக்கம் பெற ஏதுவாக சீன தூதரகர் அழைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சொன்னார்.

ஸ்ரீ மூடா ஆலயத் தலைவர் குமரேசன் மரணம்

ஷா ஆலம் 

சிலாங்கூர், ஷா ஆலம், தாமான் ஸ்ரீ மூடா மகா மாரியம்மன் ஆலய தலைவர் குமரேசன் இன்று காலை மரணமடைந்தார்.

ஆன்மீக சேவையிலும் மக்கள் சேவையிலும் மிகச்சிறப்பாக ஈடுபட்டுவந்த குமரேசன் நாட்டின் நிலவிய கோவிட்-19  காலகட்டத்தின்போது ஸ்ரீமூடா வட்டார மக்களுக்கு பல்வேறு உதவிகளை வந்துள்ள நிலையில் அன்னாரின் மறைவு வேதனை அளிப்பதாக மலேசிய இந்தியர் குரல்  இயக்கத்தின் சிலாங்கூர் மாநில தலைவர் மணிமாறன் தெரிவித்தார்.

கோவிட்-19: மக்களிடையே விழிப்புணர்வு தேவை- கணபதிராவ்

 ஷா ஆலம்-

கோத்தா கெமுனிங்  சட்டமன்ற தொகுதி அலுவலகம்  ஏற்பாட்டில் நடத்தப்பட்ட  கோவிட்-19  பரிசோதனை நடவடிக்கையில் 3,000 மக்கள் கலந்து கொண்டு தங்களை பரிசோதித்து கொண்டனர்.

 நாட்டை உலுக்கி  வரும் கோவிட்-19. வைரஸ் பாதிப்பிலிருந்து  மக்களை பாதுகாக்கும்  வகையில் சிலாங்கூர் மாநில அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு நேற்று தாமான் ஸ்ரீ மூடாவில் நடைபெற்றது.

கோவிட்-19)  வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவி மக்கள் உயிர்க்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ள நிலையில் மக்கள் அதிக விழிப்புடனும்  எஸ்ஓபி நடைமுறைகளைக் கடைப்பிடித்து அந்த பாதிப்பில் இருந்து விலகி நிற்க வேண்டும் எனவும் கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினரும் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினருமான வீ.கணபதிராவ் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வில் சிலாங்கூர் மாநில சுகாதாரத்திற்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா, கோத்தா ராஜா நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் சாபு ஆகியோர் நேரில் வந்து நிலவரங்களை பார்வையிட்டனர்.