Thursday 1 February 2018

சுங்கை சிப்புட்டில் தைப்பூசம்; காவடிகள் ஏந்தி வந்து பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர்

ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
சுங்கை சிப்புட் ஶ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தின் தைப்பூச விழா இன்று மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

முருகப் பெருமானின் அருளாசி பெறுவதற்காக நேற்று இரவு தொடங்கி பால்குடங்களை ஏந்தி வந்த பக்தர்கல் பாலாபிஷேகம் செய்தனர். இன்று அதிகாலை தொடங்கி காவடிகளை ஏந்தி வந்த பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். மயில் காவடி, தீச்சட்டி, முடி காணிக்கை பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.

இன்று சந்திர கிரகணம் என்பதால் மாலை 6.00 மணிக்கு முன்னதாகவே காவடிகளை ஏந்தி வந்து பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.

இதனிடையே, இங்குள்ள மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப்பள்ளியில் ஒன்று திரண்ட மாணவர்கள் பால்குடங்களை ஏந்தி முருகப் பெருமானுக்கு நேர்த்திக் கடனை செலுத்தினர்.

இன்றைய தைப்பூச விழாவில் 10,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்து முருகப் பெருமானை தரிசித்துச் சென்றனர்.

மேலும், ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் பசி, தாகத்தை போக்க அரசியல் கட்சிகளும், பொது இயக்கங்களும் தண்ணீர் பந்தலை அமைத்து மோர், குளிர்பானங்கள், உணவுகளை வழங்கினர்.


No comments:

Post a Comment