Thursday 8 February 2018

முகமட் ரிடுவானை தேடும் நடவடிக்கை கைவிடப்படவில்லை- போலீஸ்


கோலாலம்பூர்-
திருமதி இந்திரா காந்தியின் முன்னாள் கணவர் முகமட் ரிடுவான் அப்துல்லா, 9 வயது மகள் பிரசன்னா டிக்‌ஷா ஆகியோரை தேடும் நடவடிக்கை போலீஸ் கைவிடவில்லை என மத்திய குற்றப் புலனாய்வு பிரிவு இயக்குனர் டத்தோஶ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் முகமட் தெரிவித்தார்.

முகமது ரிடுவானையும் பிரசன்னா டிக்‌ஷாவையும் தேடும் பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது என கூறிய அவர், இவ்விவகாரம் தொடர்பில் ஆருடங்கள் கூறுவதை பொதுமக்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

2004 மே மாதம் ஈப்போ உயர்நீதிமன்றம் விதித்த தீர்ப்பின்படி கடைசி மகளான பிரசன்னா டிக்‌ஷாவை தனது முன்னாள் மனைவி எம்.இந்திரா காந்தியிடம் ஒப்படைப்பதில் முகமட் ரிடுவான் தோல்வி கண்டுள்ளார்.

இதனிடையே கடந்த வாரம் பிரசன்னா டிக்‌ஷா உட்பட மூன்று பிள்ளைகளின் ஒருதலைபட்சமான மதமாற்றம் செல்லாது எனவும் மதமாற்றம் செய்யப்பட்ட மூன்று பிள்ளைகளின் விண்ணப்பங்கள் ரத்து செய்யப்படுவதாகவும் கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

No comments:

Post a Comment