Thursday 22 February 2018

'கே-லிங்க்'-இல் பெண்களும் சாதிக்கலாம்; முன்னுதாரணமாகத் திகழ்கிறார் சிஏ சாந்தி



Sponsered Article

கோ.பத்மஜோதி

கிள்ளான் -
சமையல் அறையில் பூட்டிக் கிடந்த பெண்கள் இன்று ஆண்களுக்கு நிகராக பல துறைகளில் தங்களை ஈடுபடுத்தி கொண்டு பல சாதனைகளைப் புரிந்து வருகிறார்கள். அன்றைய காலம் போல் இல்லாமல் காலவோட்டத்திற்கு ஏற்றாற்போல் தங்களை உருமாற்றி கொண்டு இன்று எண்ணிலடங்கா சாதனைகளை பெண்கள் புரிந்து வருகின்றனர் என்றால் அது மிகையாகாது.

அந்த வகையில் 'எம்எல்எம்' பலநிலை வியாபாரத் துறையில்தன்னை ஈடுபடுத்தி கொண்டு வெற்றி வாசலை தொட்ட சிஏ (கிரவுன் அம்பாஸிடர்) சாந்தியிடம் 'பாரதம்' மின்னியல் ஊடகம் மேற்கொண்ட நேர்காணல் இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.


கே: உங்களைப் பற்றி?

ப: நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் கிள்ளான் வட்டாரத்தில்தான். உடன்பிறப்புகள் 5 பேர். எனக்கு 11 வயது இருக்கும்போதே அப்பா தவறிவிட்டார். என் தாயார் அங்கம்மாள் தான் குடும்பத்தை வழிநடத்தினார். கடந்த 2005இல் கே-லிங்க் வியாபாரத் துறையில் பகுதி நேரமாக நுழைந்தேன்.
அதன் பின்னர் 2010ஆம் ஆண்டு முதல் இந்நாள் வரையில் முழு நேர விற்பனையாளராகப் பணிபுரிந்து வருகிறேன்.

கே: வியாபாரத் துறையில் ஈடுபட எவ்வாறு ஆர்வம் வந்தது?

ப: குடும்ப சூழலைப் பார்த்த பின்னர் வியாபாரத் துறையில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் நிலவியது. வியாபாரம் செய்தால் மட்டுமே வாழ்க்கை தரம் மாறும் என்று எண்ணி கடந்த 13 ஆண்டுகளாக கே-லிங்கில் வியாபாரத் துறையை மேற்கொண்டு வருகிறேன்.

கே: கே-லிங்கில் இணைந்த பின்னர் வாழ்க்கை தரம் எவ்வாறு மாறியது? பொருளாதார சூழலைப் பற்றி….?

ப: இதற்கு முன்னர் சாதாரண தொழிலை செய்து வந்தேன். அடுக்குமாடி வீட்டில்தான் வசித்தோம். கே-லிங்கில் இணைந்த பின்னர் இரண்டு மாடி வீடு வாங்கியதோடு மூன்று கார்களையும் வாங்கினேன். பொருளாதார ரீதியில் பெரிய மாற்றத்தைக் கண்டேன். வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதற்கும் கே-லிங் உறுதுணையாக இருந்தது.


கே: பெண்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?

ப: பெண்கள் துணியுடன் இருந்து செயல்பட்டால் மட்டுமே அவர்களால் சாதனை படைக்க முடியும். 'பெண்கள் நாட்டின் கண்கள்' என்பதுபோல் ஒரு பெண்ணின் தியாகம் வீட்டிற்கு மட்டுமில்லாமல் நாட்டிற்கும் அவசியம். கே-லிங்கில் பெண்கள் தங்களை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும். துணிந்தால் வெற்றி நிச்சயம்.

கே: உங்களின் வெற்றிக்கு ஆதரவாக இருந்தவர்கள்? 

ப: டத்தோ டேரன் கோ மிகவும் ஆதரவாக இருந்து வருகிறார். சிறந்த ஒரு ஆலோசகரும் கூட. அடுத்தது, என்னுடன் மிகத் துடிப்புடன் செயலாற்றி வரும் சிஏ (கிரவுன் அம்பாஸிடர்) கிருஷ்ணன் மிகவும் உறுதுணையாக இருந்து வருகிறார். இவர்களுக்கு நான் நன்றி கூறுகிறேன். இவர்களை அடுத்து இது நாள் வரை என்னுடன் வெற்றி பாதையில் பயணித்து வரும் எமெரல்ட் சுதாஷினி, புஷ்பவள்ளி, சிவபாக்கியம், சோமசுந்திரம், துர்கா, தனசீலம் என அனைத்து எமெரல்ட்-களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

கே: உங்களது சாதனை?

ப: கே-லிங்கில் மலேசியாவிலேயே கிரவுன் அம்பாஸிடராக உருவெடுத்த பெண்கள் இருவரில் நானும் ஒருவர் என்பதே மிகப் பெரிய சாதனை.

கே: கே-லிங்கை பற்றி கூற விரும்புவது?

ப: ஒற்றுமையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

No comments:

Post a Comment