Thursday 8 February 2018
93 வயது முதியவரை நாட்டை ஆள அனுமதிக்கலாமா? - டத்தோஶ்ரீ தனேந்திரன்
ரா.தங்கமணி
ஈப்போ-
வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி தனது பிரதமர் வேட்பாளராக அறிவித்துள்ளதை மலேசியர்கள் ஏற்க மாட்டார்கள் என கூறிய மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன், 93 வயது முதியவரை மீண்டும் நாட்டை ஆள அனுமதிக்கலாமா? என கேள்வி எழுப்பினார்.
தற்போதைய தேசிய முன்னணி அரசாங்கம் இந்தியர்களின் மேம்பாட்டுக்காக பல நல்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் தலைமைத்துவத்தில் இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக அதிகமாக மானியங்களும் ஒதுக்கீடுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
முன்னாள் பிரதமரான துன் மகாதீர் நாட்டை 22 ஆண்டுகள் ஆட்சி புரிந்தபோது இந்திய சமுதாயம் பலவற்றை இழந்தது. குறிப்பாக அரசுத் துறையில் வேலை வாய்ப்பு, கல்வி, பொருளாதாரத்தில் பின்னடைவு என இந்திய சமுதாயம் பலவற்றை இழந்தது.
தற்போது எதிர்க்கட்சிக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள துன் மகாதீர் மீண்டும் பிரதமராக பதவியேற்றால் அது இந்திய சமுதாயத்திற்கு பலவீனமாக அமையும்.
93 வயதாக துன் மகாதீர் மீண்டும் பிரதமராவதை மலேசியர்கள் ஏற்க
மாட்டார்கள் என்ற டத்தோஶ்ரீ தனேந்திரன், வரும் பொதுத் தேர்தலில் இந்திய சமுதாயம் நன்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டும் எனவும் தவறான ஒன்றை தேர்ந்தெடுத்து சிறப்பான எதிர்காலத்தை வீணடிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment