Sunday 11 February 2018

வெளி வேட்பாளர்களை ஏற்க பிஎஸ்எம் தயார்; ஆனால் 3 விதிமுறைகள் உள்ளன


கோலாலம்பூர்-
வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் கட்சி சின்னத்தின் கீழ் போட்டியிட விரும்பும்  வெளி வேட்பாளர்களை ஏற்க பிஎஸ்எம் கட்சி தயாராக இருக்கிறது. ஆனால் 3 விதிமுறைகளுக்கு அவர்கள் கட்டுப்பட வேண்டும் என அக்கட்சியின் மத்திய செயலவை உறுப்பினர் எஸ்.அருட்செல்வம் கூறினார்.

'பொதுவில் சொத்துகளை அறிவிப்பது, கறை படிந்த அரசியல் செய்யாதது, போட்டியிடும் தொகுதிகளில் மக்கள் சேவை மையத்தை திறப்பது ஆகியவை அந்த மூன்று விதிமுறைகள் ஆகும்'.

இம்மூன்றையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் உள்ளவர்களை நாங்கள் விரும்புகிறோம். மக்களுக்கு உதவ வேண்டும் என்பதே எங்களது முதன்மை நோக்கமாக இருப்பதால் இம்மூன்றையும் ஏற்காதவர்களை நாங்கள் ஏற்க மாட்டோம் என செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இவ்வாறு சொன்னார்.

இம்முறை பிஎஸ்எம் கட்சி வேட்பாளர்கள் தங்களது சொந்த சின்னத்திலேயே போட்டியிடுவர்.

இதற்கு முன்னர் பிற கட்சிகளின் சின்னத்தின் கீழ் போட்டியிட்டு வந்த நிலையில் தற்போது சொந்த சின்னத்தில் போட்டியிட முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கட்சியை அரசாங்கம் அங்கீகரிக்காததால் ஒரு கட்டாய சூழலில் அடிப்படையிலேயே கடந்த 1999, 2004, 2008 ஆகிய பொதுத் தேர்தல்களில் பிற கட்சிகளின் சின்னத்தின் கீழ் பிஎஸ்எம் கட்சி போட்டியிட்டது.

வரும் தேர்தலில் பிஎஸ்எம் கட்சி 17 தொகுதிகளில் போட்டியிடவுள்ளது. அவை 5 நாடாளுமன்றத் தொகுதிகளையும் 2 சட்டமன்றத் தொகுதிகளையும் உள்ளடக்கியதாகும்.

கேமரன் மலை (சுரேஷ் குமார்), சுபாங் (எ.சிவராஜன்), பத்துகாஜா, உலு லங்காட் (எஸ்.அருட்செல்வன்), சுங்கை சிப்புட் (டாக்டர் மைக்கல் ஜெயகுமார்) ஆகிய 5 நாடாளுமன்றத் தொகுதிகளாகும்.

ஜெலாப்பாங் (எம்.சரஸ்வதி), செமினி (நிக் அஸிஸ் அஃபிக்), புக்கிட் லஞ்சான் (வி.செல்வம்), ஜெலாய் (முகமட் நோர் அயாட்), கிள்ளான் பள்ளத்தாக்கு, துரோனோ (சின் குவாய் ஹெங்), புந்தோங் (ஆர்.மோகனராணி), ஶ்ரீ மூடா (அப்துல் ரசாக் இஸ்மாயில்), கோத்தா லாமா (கைருல் நிஸாம்), மெங்களம்பு (சின் க்வாய் லியோங்), கோத்தா டாமன்சாரா (நசீர் ஹசீம்), மாலிம் நவார் (கே.பவானி) ஆகியவை போட்டியிடும் 12 சட்டமன்றத் தொகுதிகளாகும் என அவர் சொன்னார்.

No comments:

Post a Comment