Wednesday, 31 January 2018

சமய நெறிகளை மீறாமல் தைப்பூச விழாவை கொண்டாடுங்கள்- பொன்.சந்திரன்


ரா.தங்கமணி

ஈப்போ-
முருகப் பெருமானின் அருளாசி பெற கொண்டாடப்படும் தைப்பூச விழாவில் இந்துக்கள் சமய நெறிகளை மீறாமல் கொண்டாட வேண்டும் என மலேசிய இந்து சங்கத்தின் பேராக் மாநிலத் தலைவர் பொன்.சந்திரன் வலியுறுத்தினார்.

சமய விழாவாக கொண்டாடப்படும் தைப்பூச விழாவில் இந்து மக்கள் காவடிகளை ஏந்துவதிலும்  உடைகளை அணிவதிலும் சமய நெறிகளை கடைபிடிக்க வேண்டும்.

இந்து மக்களிடையே சமய நெறிகள் மேம்படவும் பக்தர்களின் பாதுகாப்புக்காகவும் 'தைப்பூச பணிப்படை' 4ஆவது ஆண்டாக மேற்கொள்ளப்படுகிறது.

இம்முறை போலீஸ் படை, குற்றச்செயல் தடுப்பு இயக்கம், ஈப்போ அருணகிரிநாதர் மன்றம், இந்து இளைஞர் மன்றம், தாஜ் அனைத்துலக கல்லூரி ஆகியவற்றின் ஆதரவோடு 'பணிப்படை' மேற்கொள்ளப்படுகிறது என அவர் சொன்னார்.

No comments:

Post a Comment