Wednesday 7 February 2018

ஜகர்த்தாவில் கடுமையான வெள்ளப் பெருக்கு; ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு


ஜகர்த்தா-
 கடுமையான மழை பெய்வதை தொடர்ந்து இந்தோனேசியாவின் தலைநகரான ஜகர்த்தாவில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

மழை பெய்து வருவதால் ஜகார்த்தாவின் புறநகர் பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து  ஓடுவதோடு சில இடங்களில் மண் சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.

அருகிலிலுள்ள அணைக்கட்டு ஒன்றில் அபாயக் கட்ட அளவுக்கு தண்ணீர் பெருகி விட்டதால் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து சில பகுதிகள் வெள்ளக்காடாகியுள்ளன.

இந்த வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இராணுவத்தினர் உதவிகளை வழங்கி வருகின்றனர்.

No comments:

Post a Comment