Sunday 11 February 2018

வசந்தபிரியா விவகாரம்; ஆருடங்கள் பரப்புவதை நிறுத்திக் கொள்ளுங்கள் - பள்ளி பெ.ஆ.சங்கம்


நிபோங் தெபால்-
மாணவி வசந்தபிரியா மரணம் தொடர்பிலான விசாரணை முடிவு வரும் வரை அம்மாணவியின் மரணம் குறித்த ஆருடங்கள் பரப்பப்படுவதை அனைத்துத் தரப்பினரும் நிறுத்திக் கொள்ளுமாறு நிபோங் தெபால் மெத்தடிஸ்ட் இடைநிலைப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம்  வேண்டுகோள் விடுத்துள்ளது.

அம்மாணவியின் மரணம் தொடர்பில் மாநில கல்வி இலாகாவும் போலீசாரும் விசாரணை மேற்கொள்கின்ற நிலையில் அவர்களுக்கான நேரத்தையும் வாய்ப்பையும் வழங்க வேண்டும் என  பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் தியோ சியாங் ஹூய் தெரிவித்தார்.

வசந்தபிரியா மரணம் அடைந்ததில்  நாங்கள் வருத்தமும் அதிருப்தியும் அடைந்துள்ளோம். சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

போலீசார், கல்வி இலாகா  மேற்கொள்ளும் விசாரணையில் நாம் தலையிடக்கூடாது.

வசந்தபிரியா மரணம் தொடர்பிலான ஆருடங்கள் பரப்பப்படுவது நிறுத்திக் கொள்ளப்பட்டால் அது மாணவருக்கும் ஆசிரியருக்குமான உறவை மேம்படுத்த உதவியாக இருக்கும் என நேற்று நடைபெற்ற பெ.ஆ.சங்க கூட்டத்தின்போது அவர் வலியுறுத்தினார்.

மேலும், மாணவர்களிடம் விசாரணை மேற்கொள்ளும்போது கல்வி அமைச்சு வரையறுத்துள்ள பள்ளி செயல்முறை நடவடிக்கைவழிகாட்டியை (எஸ்ஓபி) ஆசிரியர்கள் கடைடிக்க வேண்டும் என  அவர் வலியுறுத்தினார்.

ஆசிரியர் ஒருவரின் கைப்பேசி களவு போனது தொடர்பில் மாணவி வசந்தபிரியாவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை மனமுடைந்த அவர் கடந்த ஜனவரி 24ஆம் தேதி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அவரை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தபோதிலும் சிகிச்சை பலனளிக்காமல் கடந்த 1ஆம் தேதி மரணமடைந்தார்.

மாணவி வசந்தபிரியாவிடம் விசாரணை மேற்கொண்ட சம்பந்தபட்ட ஆசிரியை தற்போது மாவட்ட கல்வி இலாகாவுக்கு மாற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment