ரா.தங்கமணி
சுங்கை சிப்புட்-
சுங்கை சிப்புட் வட்டாரத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மின்சுடலை கூடிய விரைவில் சுங்கை சிப்புட் ஶ்ரீ சுப்பிரமணியம் தேவஸ்தானத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது என சுங்கை சிப்புட் மஇகா தொகுதி செயலாளர் கி.மணிமாறன் தெரிவித்தார்.
கடந்த 2014ஆம் ஆண்டில் 18 லட்சம் வெள்ளி செலவில் நிர்மாணிக்க தொடங்கிய இந்த மின்சுடலை பணி தற்போது முழுமையாக நிறைவு பெற்றுள்ளது.
அண்மையில் புத்ராஜெயாவில் மஇகா தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர்
எஸ்.சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற பொது மண்டபம், மின் சுடலை நிர்மாணிப்புக்கான கூட்டத்தில் சுங்கை சிப்புட் மின்சுடலை கூடிய விரைவில் நிர்மாணிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என கூறப்பட்டது.
அதன்படி தற்போது மின்சுடலை நிர்மாணிப்புப் பணி முழுமை பெற்று கோலகங்சார் நகராண்மைக் கழகம் அதன் பராமரிப்புப் பணியை ஶ்ரீ சுப்பிரமணியம் தேவஸ்தானத்திடன் ஒப்படைக்கும் என அவர் கூறினார்.
இவ்வேளையில் மின்சுடலை நிர்மாணிப்புப் பணியை முன்னெடுத்த பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக், மஇகா தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ சுப்பிரமணியம், சுங்கை சிப்புட் மஇகா தொகுதித் தலைவர் இளங்கோவன் முத்து, பிரதமர் துறையின் கீழ் இயங்கும் பொருளாதார திட்டமிடல் பிரிவு ஆகியவற்றுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment