Wednesday 21 February 2018

பாஸ், பிஎஸ்எம் பக்காத்தான் ஹராப்பான் வெற்றியை சிதைத்து விடாது- சிவநேசன்



கோலாலம்பூர்-
வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் பிஎஸ்எம், பாஸ் கட்சி ஆகியவை மும்முனை, நான்கு முனை போட்டியை ஏற்படுத்தினாலும் அதனால் பக்காத்தான் ஹராப்பானை பெரியளவில் பாதிப்படையச் செய்யாது என சுங்கை சட்டமன்ற உறுப்பினர் அ.சிவநேசன் குறிப்பிட்டார்.

இத்தேர்தலில் நேரடி மோதல் தேசிய முன்னணிக்கும் பக்காத்தான் ஹராப்பானுக்கும் இடையே ஆகும். பாஸ், பிஎஸ்எம் கட்சிகள் இந்த மோதலை பெரிதளவில் சிதைத்து விடாது.

இந்த மோதல் மலேசிய மக்களின் 'ஜனநாயகத்துக்கான' போராட்டமாகும். மக்கள் தெளிவானவர்களாக உருமாறி விட்டனர். மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கின்ற அடிப்படை பிரச்சினைகளின் முடிவாக இந்த தேர்தல் அமைந்து விடும்.

பாஸ் கட்சி பக்காத்தான் கூட்டணியில் இணையவில்லை. ஆயினும் இக்கூட்டணி அவர்கள் நேசிக்கின்றனர். அவர்களுக்கு முதல் எதிரி அம்னோ தானே தவிர முன்னாள் பிரதமர் துன் மகாதீர் கிடையாது.

இத்தேர்தலில் பேராக் மாநிலத்தில் பல்வேறு சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட பிஎஸ்எம் கட்சி முடிவெடுத்துள்ளது. அது அவர்களின் உரிமை, அதனை நாம் தடுத்து நிறுத்த முடியாது.

அவர்களால் (பிஎஸ்எம்) டிஏபி, பக்காத்தான் ஹராப்பானின் வெற்றியை சிதைத்து விட முடியும் என்பதை என்னால் நம்பமுடியவில்லை.

பக்காத்தான் கூட்டணியில் பிஎஸ்எம் கட்சியை யாரும் ஒதுக்கி வைக்கவில்லை. ஆனால் அவர்கள் முடிவெடுத்த பின்னர் பேச்சுவார்த்தைக்கு வருகின்றனர். இதுதான் சூழ்நிலையை மாற்றியமைத்தது என பேராக் ஜசெக உதவித் தலைவருமான சிவநேசன் மேலும் கூறினார்.

தற்போது பிஎஸ்எம் கட்சி 5 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் 12 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட தீர்மானித்துள்ளது.

No comments:

Post a Comment