Monday 5 February 2018

வசந்தபிரியா விவகாரத்தில் மூன்று விசாரணை அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன- போலீஸ்



நிபோங் தெபால்-
மாணவி வசந்தபிரியா தற்கொலை மரணம் தொடர்பில் போலீசார் மூன்று விசாரணை அறிக்கைகள் மாநில துணை பொது வழக்கறிஞர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தென் செபெராங் பிறை  மாவட்ட தலைவர் சூப்பிடென்டன்ட் அப்துல் சமாட் தெரிவித்தார்.

அதில் ஒரு விசாரணை அறிக்கை தற்கொலைக்கு முயன்றதாக குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 309இன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மற்ற இரு விசாரணை அறிக்கைகள் குறித்து அவர் கருத்துரைக்கவில்லை.
இவ்விரு விசாரணை அறிக்கைகளையும் அதற்கேற்ற பிரிவுகளின் கீழ் தொடங்குவதற்கு நாங்கள் பரிந்துரைத்துள்ளோம்.

அடுத்தக்கட்ட நடவடிக்கை துணை பொது வழக்கறிஞரின் முடிவை பொறுத்தே அமையும் என அவர் சொன்னார்.

"அந்த பெண்ணின் மரணத்திற்கு காரணமாக அந்த ஆசிரியர் குற்றஞ்சாட்டப்படுவதை உறுதியாக சொல்ல முடியாது. ஆயினும் வழக்கு விசாரணையை பொறுத்தே நடவடிக்கைகள் அமையும் என இன்று அவர் கூறினார்.

No comments:

Post a Comment