Thursday 8 February 2018

வீடமைப்பு திட்டம் உட்பட அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணுங்கள்- பேராக் மந்திரி பெசாரிடம் கோரிக்கை


ரா.தங்கமணி 

சுங்கை சிப்புட்-

சுங்கை சிப்புட்டில் நிலவும் சில அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என பேராக் மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ ஸம்ரி அப்துல் காதீரின் கவனத்திற்கு சுங்கை சிப்புட் தொகுதி  மஇகா கொண்டு சென்றுள்ளது.

கமுனிங் பகுதியில் மக்கள் வீடமைப்பு திட்டம் மேற்கொள்ளப்படுவதற்காக பல ஆண்டுகளுக்கு முன்னரே நிலம் அடையாளம் காணப்பட்டது. ஆனால் அங்கு இன்னமும் வீடமைப்பு திட்டம் மேற்கொள்ளப்படவில்லை. இங்கு மக்கள் வீடமைப்புத் திட்டம்  மேற்கொள்ளப்பட்டால் அது இங்கு வீட்டு வசதி இல்லா மக்களுக்கு பேருதவியாக இருக்கும் என பரிந்துரை செய்யப்பட்டதாக தொகுதி மஇகா செயலாளர் கி.மணிமாறன் தெரிவித்தார்.

மேலும் சுங்கை சிப்புட் வட்டாரத்தில் நிகழும் வெள்ளப் பிரச்சினைக்கு தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டதோடு சில அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண கோரிக்கை முன்வைக்கப்பட்டன.

தொகுதி மஇகா முன்வைத்த கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட டத்தோஶ்ரீ ஸம்ரி, இப்பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என அண்மையில் இங்கு வருகை தந்தபோது கூறினார்.

அதோடு, இந்த வருகையின்போது தொகுதி தேசிய முன்னணி பங்காளி, தோழமை கட்சிகளுடன் சந்திப்பு நடத்தி வரும் பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்கள் கலந்துரையாடல் செய்யப்பட்டதாக மணிமாறன் சொன்னார்.

மந்திரி பெசாரின் இந்த கலந்துரையாடல் பல முக்கிய  விவகாரங்களை உள்ளடக்கியதோடு வரும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான உற்சாகத்தையும் நம்பிக்கையையும் அளித்துள்ளது என அவர் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment