Thursday, 22 February 2018

உள்ளூர் வேட்பாளர் விவகாரம்; சுங்கை சிப்புட் மஇகாவில் அதிரடி மாற்றம் நிகழலாம்?


ரா.தங்கமணி
சுங்கை சிப்புட்-
வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் வெற்றி கொள்ளும் வகையில் சுங்கை சிப்புட் மஇகாவில் சில அதிரடி நடவடிக்கைகளை மஇகா தலைமைத்துவம் முன்னெடுக்கலாம் என நம்பப்படுகிறது.

மஇகாவின் பாரம்பரிய தொகுதியான சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் பொதுத் தேர்தலை முன்னின்று நடத்தும் வகையில் கட்சியில் சில மாற்றங்களை ஏற்படுத்தவிருக்கும் மஇகா, அதன்படி தொகுதி மஇகா ஒருங்கிணைப்பாளராக டான்ஶ்ரீ எஸ்.வீரசிங்கத்தையும் செயலாளராக தங்கராஜுவையும் நியமனம் செய்யக்கூடும்.

14ஆவது பொதுத் தேர்தலை எதிர்கொள்வதற்கு ஏதுவாக தற்போது இங்கு உருவெடுத்திருக்கும் உள்ளூர் வேட்பாளர் விவகாரமே இந்த மாற்றத்திற்கு காரணமாக அமையலாம் என கூறப்படுகிறது.

இங்கு உள்ளூர் வேட்பாளர் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் அதுவே தேமு வெற்றியை சீர்குலைப்பதாக அமைந்து விடக்கூடாது என்ற நிலையில் இந்த அதிரடி மாற்றத்தை மஇகா தலைமைத்துவம் முன்னெடுக்கலாம்.

தற்போது இத்தொகுதியின் தேர்தல் நடவடிக்கை குழுத் தலைவராக டான்ஶ்ரீ வீரசிங்கமும் செயலாளராக தங்கராஜுவும் இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment