Tuesday 20 February 2018

ஈப்போ, கல்லுமலை சுப்பிரமணியர் ஆலய தைப்பூச வசூல் வெ. 355,538.35


ரா.தங்கமணி
ஈப்போ-
இவ்வாண்டு தைப்பூச விழாவில் ஈப்போ, கல்லுமலை ஶ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்திற்கு வெ.355,538.35 வசூல் செய்யப்பட்டது என ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபா தெரிவித்துள்ளது.

இவ்வாண்டு மிக விமரிசையாக கொண்டாடப்பட்ட தைப்பூச விழாவில் பால்குடம் மூலம்  வெ.60,564.00, முடி காணிக்கை மூலம் 42,205.00, அர்ச்சனை சீட்டுகளின் மூலம் 13,677.00, அர்ச்சனை தட்டு (இரத ஊர்வலம்) வெ.6.204.00, காவடிகள் மூலம் வெ. 3,410.00, கடை ஏலத்தின் மூலம் வெ.57,868.00, நன்கொடை மூலம் வெ.26.230.00, மாநகர் மன்ற கடைகளின் மூலம் 25,850.00, கோவில் உண்டியல் வெ.70,551.00, இரத உண்டியல் மூலம் வெ. 21,808.35, நன்கொடை (பால்குடம்) வெ.15,489.00, அன்னதானம்வெ. 3,000.00, அரிசி விற்பனை மூலம் வெ. 700.00, டிஜி நிறுவனம் வெ.3,000.00, நெஸ்லே வெ.5,000.00 என மொத்தம் வெ. 355,538.35 காசு வசூலிக்கப்பட்டது என தேவஸ்தான பரிபாலன சபாவின் துணைத் தலைவர் இரா.சீத்தாராமன் தெரிவித்தார்.

ஆண்டுதோறும் தைப்பூச விழாவுக்கு நன்கொடையை வழங்கும் மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ ஸம்ரி அப்துல் காதீர், இவ்வாண்டும் கணிசமான தொகையை வழங்குவார் என நம்புவதாகவும் அதற்கான கோரிக்கை மாநில மந்திரி பெசாரின் சிறப்பு ஆலோசகர் டத்தோ வ.இளங்கோவிடம் வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.

அதோடு, தைப்பூச விழாவுக்கு பேருதவி புரிந்த அன்பர்களுக்கும் பொது இயக்கங்களுக்கும் போலீஸ் படையினர், ரேலா படையினர், சமய இயக்கங்கள், ஆலய வளாகத்தை சீரமைத்துக் கொடுத்த புந்தோங் மைபிபிபி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் டத்தோ நரான் சிங், நன்கொடையாளர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் மேலும் சொன்னார்.

No comments:

Post a Comment