கோலாலம்பூர்
லியோ குளோபல் குழுமத்தின் ஏற்பாட்டில் பசுமையான பாடல்களுடன்
கூடிய “நேற்று
இன்று நாளை” எனும் மாபெரும் விருந்துடன்கூடிய கலை நிகழ்ச்சி
நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வு வருகின்ற மார்ச் 2ஆம் நாள் இரவு 8.01 மணிக்கு ஷா
ஆலாமிலுள்ள திஎஸ்ஆர் மாநாட்டு மண்டபத்தில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வின் செய்தியாளர் சந்திப்பு அண்மையில் தலைநகரிலுள்ள சிக்னைச்சர் தங்கும்
விடுதியில் நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான டத்தோ டாக்டர் எஸ். முத்தழகன்
தலைமையேற்றார்.
இந்த கலை நிகழ்ச்சியில் சென்னை, ‘தி அல்திமேட் சினி ஒர்செத்ரா இசையமைப்பாளர்
ரப்பி, நடிகை தேவி பிரியா, சென்னை ‘ஃபொட்லொஸ்’ நடன ஆசிரியர் எட்வின், தெய்வமகள் புகழ் கிருஷ்ணா, வாணி போஜன், காயதிரி மற்றும் உள்ளுர் கலைஞர்களும் தென்னிந்திய கலைஞர்களும் கலந்துச்
சிறப்பிக்கவுள்ளனர்.
இந்நிகழ்வு குறித்து மேல் விபரங்களுக்கு, மைக்கல் கானா 011 2355 7568
அல்லது சோலமன் 012 712 5561 என்ற எண்களுடன் தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment