Wednesday, 14 February 2018
'என் மகளை பற்றி நன்கு அறிந்தவன் நான்; கமலநாதன் அல்ல' தந்தை முனியாண்டி
நிபோங் தெபால்-
'என் மகள் மனநலம் பாதிக்கப்பட்டவள் எனவும் உண்மைக்கு புறம்பான தகவல்கள் திரித்து கூறப்படுவதையும் நிறுத்திக் கொள்ளுமாறு மாணவி வசந்தபிரியாவின் தந்தை ஆர். முனியாண்டி (54) அனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொண்டார்.
என் மகள் இதற்கு முன் எவ்வித தற்கொலை முயற்சிக்கும் முயன்றதில்லை. அவளை பற்றி எங்களுக்கு நன்றாக தெரியும்'.
2016ஆம் ஆண்டு மாணவி வசந்தபிரியா மணிக்கட்டை அறுத்து தற்கொலைக்கு முயன்றார் எனவும் மருத்துவ உதவியை பெறுமாறு ஆலோசனையாளர்கள் வழங்கிய பரிந்துரையை சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் பின்பற்றவில்லை எனவும் கல்வி துணை அமைச்சர் டத்தோ ப.கமலநாதன் கூறியுள்ள கருத்தை மறுத்தா முனியாண்டி.
'என் மகளை பற்றி எனக்கு நன்றாக தெரியும். என் மகளின் மனநிலையை பற்றி அவர் (கமலநாதன்) விவாதிக்க வேண்டியதில்லை. என் மகள் இதற்கு முன் தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்ற தகவலை அவர் எங்கு பெற்றிருப்பார் என்பது எங்களுக்கு தெரியும். எங்களின் இதயங்களை உடைக்க வேண்டாம்' என்றார் அவர்.
பாடுவதிலும் வரைவதிலும் ஆர்வம் கொண்டிருந்த அவள் ஒரு மருத்துவராக வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டிருந்தாள், பல உயிர்களை காப்பாற்றவும் சிறந்த உலகை உருவாக்கவும் எண்ணம் கொண்டிருந்தாள் என முனியாண்டி மேலும் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment