கிரீக்-
கிரீக்- ஜெலி கிழக்கு- மேற்கு நெடுஞ்சாலையில் 3 கார்களை உட்படுத்திய சாலை விபத்தில் நால்வர் பலியானதோடு அறுவர் காயமடைந்தனர். அதில் இருவர் கடுமையான காயங்களுக்கு இலக்காகியுள்ளனர்.
அவ்டி, இஸுசு டி- மெக்ஸ், பெரோடுவா கெனாரி ஆகிய மூன்று கார்களை உள்ளடக்கிய இச்சாலை விபத்து இன்று பிற்பகல் 12.45 மணியளவில் நிகழ்ந்தது.
இதில் சம்பவ இடத்திலேயே இருவர் பலியானதோடு மேலும் இருவர் கிரீக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது சிகிச்சை பலனிக்காமல் இறந்தனர் என கிரீக் மாவட்ட தீயணைப்பு, மீட்புப் படை இலாகாவின் தலைவர் அஸிஸுல் அஸாரிஸ் தெரிவித்தார்.
No comments:
Post a Comment