Saturday 10 February 2018

மலேசியக் கலை உலகத்தின் ‘ஆடவரலாம்’



உள்ளுர் கலைஞர்களின் மத்தியில் பிரபலமான இயக்கங்களில் ஒன்றாக செயல்ப்பட்டு வரும் மலேசிய கலை உலகம், உள்ளூர் கலைஞர்களின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றி வருகின்றனர்.

அந்த வகையில், இன்றைய இளைய தலைமுறையினரிடையே கிராமிய நடன கலையைக் கொண்டு சேர்க்கும் விதத்தில் மலேசிய கலை உலகம் இரண்டாவது முறையாக ஆடவரலாம் எனும் கிராமிய நடனப் போட்டியை ஏற்பாடு செய்துள்ளனர்.

இதன் வழி அதிகமான நம் இளைய நடனக் கலைஞர்கள் தங்களின் திறமையே வெளிப்படுத்த ஒரு தளத்தை மலேசியக் கலை உலகம் உருவாக்கியுள்ளனர்.

ஆடவரலாம் இறுதிச் சுற்றுப் போட்டி வருகின்ற 17ஆம் தேதி, சனிக்கிழமை மாலை மணி 5க்கு, தலைநகரிலுள்ள டெம்பள் ஆஃப் பைன் ஆர்ட்ஸில் சிறப்பாக நடைப்பெறவுள்ளது.

இப்போட்டியின் தேர்வு சுற்று கடந்த ஆண்டு நவம்பர் நடைபெற்றது. அதில் 12 குழுக்கள் பங்குப் பெற்றனர். தேர்வுச் சுற்றுக்குப் பிறகு தற்பொழுது இறுதி சுற்று நடைபெறுகிறது. இதில் 6 குழுக்கள் தங்களின் கிராமிய நடன திறமையை பெளிப்படுத்தவுள்ளனர்.



இந்தியர்களின் பாரம்பரிய நடனங்களை முன்னிறுத்தி படைப்புகள் அமைந்திருக்கும். இப்போட்டியில் இறுதிச் சுற்றில் இடம் பெரும் நடனங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவரும் என்பதில் ஐயமில்லை என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளரும் மலேசிய கலை உலகத்தின் தலைவருமான எஸ்.பி. பிரபா செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

மேலும், இறுதிச் சுற்றில் ஒவ்வொரு குழுவும் இரண்டு சுற்றுகளில் தங்களின் படைப்புகளை வெளிப்படுத்துவார்கள். முதல்க் சுற்றில் குழுக்கள் தானாகவே தேர்வு செய்த பாடல்களுக்கு ஆடுவர். இரண்டாம் சுற்றுக்கான பாடலும் அதற்கான கருப்பொருளையும் ஏற்பாட்டுக் குழுவினர்களால்  வழங்கப்படும்.

இப்போட்டியில் தி ஸ்வாகர்ஸ் அபிநேய தென்றல், ஸ்ரீ சக்தி, கேவியஸ் கிரியேஸன்ஸ், ரியான ஆர்ட்ஸ் மற்றும் கிரேட் & கோல் டான்ஸ் அகேடெமி எனும் ஆறு குழுக்கள் பங்கு கொள்கின்றனர்.

முழுமையான கிராமிய நடனப் போட்டி என்பதால் முதல் சுற்று கிராமிய பாடல்களும் புதுபாடல்களுக்கு நடனமாகுவர். பிறகு இரண்டாம் சுற்றுக்கு 70ஆம் 80ஆம் பாடல்களுக்கு நடனமாடவுள்ளனர். இப்போட்டிக்கு தலைமை நிதிபதியாக மலேசிய கலை உலகத்தின் ஆலோசகரும், விமர்சகன் தலைமையாசிரியருமான எஸ்.பி.சரவணன் பொருப்பு வகுக்கிறார். அவருடன் மணிமாறன், பரமேஸ்வரி, இந்திரானி, சாந்தி ஆகியோர் இப்போட்டியில் நடுவர்களாக பொருப்பு வகுக்கின்றனர் என்றும் எஸ்.பி. பிரபா மேலும் குறிப்பிட்டார்.


இந்நிகழ்வை செனட்டர் டத்தோ டி. மோகன் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கவுள்ளார். நிகழ்வின் சிறப்பு விருந்தினராக இளைஞர் விளையாட்டுத்துறை துணையமைச்சார் டத்தோஸ்ரீ எம். சரவணன், மற்றும் பல முக்கிய பிரமுகர்களும் கலந்துச் சிறப்பிக்கவுள்ளார்.

நிகழ்வின் சிறப்பு அம்சமாக மூத்தக் கலைஞர் ஒருவருக்கு சிறப்பு செய்யப்படவுள்ளது.

இப்போட்டியில் வெற்றி பெறும் குழுவுக்கு ரிம 3000 ரொக்கமும் கேடயமும் வழங்கப்படவுள்ளது. இரண்டாம் பரிசாக ரிம 2000, மூன்றாம் பரிசாக ரிம. 1000 மற்றும் ஆறுதல் பரிசாக முன்று பெருக்கு தல ரிம 500 வெள்ளியும் சான்றிதழ்களும் வழங்கப்படும் என்று சாய் எப்.எம். உரிமையாளர் சாய் சிவா தெரிவித்தார்.


மேல் விபரங்களுக்கு எஸ்.பி.பிரபாவை 012 6261489 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment