Tuesday 13 February 2018

'சுங்கை சிப்புட் இந்திய பொது இயக்கங்களின் கூட்டமைப்பு' - தொடக்கம் கண்டது


சுங்கை சிப்புட்-

சுங்கை சிப்புட்டிலுள்ள பொது இயக்கங்களை ஒன்றிணைக்கும் விதமாக 'சுங்கை சிப்புட் இந்திய பொது இயக்கங்களின் கூட்டமைப்பு' தொடங்கப்பட்டது.

இங்குள்ள 60 பொது இயக்கங்களுடன் நடத்தப்பட்ட சந்திப்புக் கூட்டத்தில் இந்த கூட்டமைப்பு  உருவாவதற்கு இணக்கம் காணப்பட்டது. அதன் அடிப்படையில் இக்கூட்டமைப்பின் தலைவராக லோகநாதன் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

துணைத் தலைவராக மு.நேருஜி, உதவித் தலைவராக கி.மணிமாறன், ஹெலன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்ட நிலையில் இக்கூட்டமைப்பின் ஆலோசகராக டத்தோ டாக்டர் ஏ.கே.சக்திவேல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இக்கூட்டமைப்பு குறித்து பேசிய லோகநாதன், இங்குள்ள இந்திய பொது இயக்கங்களை ஒன்றிணைக்கவும் ஒரு குடையின் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படவும் இக்கூட்டமைப்பு பேருதவியாக இருக்கும்.

நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டாலே அதன் பலம் வலுவானதாக இருப்பதோடு நம் சமுதாயத்திற்கான சேவைகளை இன்னும் கூடுதலாக செய்ய முடியும் எனவும் அவர் கூறினார்.

மேலும், இக்கூட்டமைப்பு முறைப்படி அரசாங்கத்தால் பதிவு செய்யப்படும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதோடு அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு பொதுநல நோக்கோடு இக்கூட்டமைப்பு செயல்பட வேண்டும் என பலர் முன்வைத்த கோரிக்கைகளுக்கு ஏற்ப திறம்பட செயல்படுவோம் என அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment