Thursday 1 February 2018

தேமு ஆட்சியில் சமய சுதந்திரம் நிலைநிறுத்தப்படும்- பிரதமர் நஜிப்


கோலசிலாங்கூர்-
தேசிய முன்னணி ஆட்சியில் கட்டிக் காக்கப்படும் சமய சுதந்திரம் தொடர்ந்து நிலைநிறுத்தப்படும் என பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் உறுதி அளித்தார்.

இந்நாட்டில் அனைத்துத் தரப்பினருக்கும் சமய சுதந்திரம்  வழங்கப்பட்டுள்ளது.  அதேபோல் இந்திய சமுதாயமும் தனது சமய சுதந்திரத்தை அனுபவித்து வருகிறது.

இந்த சமய சுதந்திரம் தொடர்ந்து நிலைநிறுத்தப்பட இந்திய சமுதாயம்  தேசிய முன்னணிக்கு பிளவுபடாத ஆதரவை வழங்க வேண்டும். எனது தலைமைத்துவத்தின் கீழ் இந்திய சமுதாயத்தின்  மேம்பாட்டிற்கு பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதை  அவர் சுட்டிக் காட்டினார்.

கோலசிலாங்கூரிலுள்ள ஶ்ரீ சுப்பியமணியர் சுவாமி ஆலயத்தின் தைப்பூச விழாவுக்கு வருகை தந்த பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் அங்கு நிர்மாணிக்கப்படவுள்ள பல்நோக்கு மண்டபத்திற்கான மாதிரி கட்டடத்தையும் பார்வையிட்டார். டத்தோஶ்ரீ நஜிப்புடன் மஇகா தேசியத் தலைவரும் சுகாதார அமைச்சருமான டத்தோஶ்ரீ சுப்பிரமணியம் உடனிருந்தார்.

No comments:

Post a Comment