Friday 9 February 2018

'புந்தோங்' பகுதி ஒரு தொழில் நகரமாக உருவாக்கம் பெற வேண்டும்- டத்தோ நரான் சிங்


நேர்காணல்: ரா.தங்கமணி/ புனிதா சுகுமாறன்

ஈப்போ
அதிகமான இந்தியர்களைக் கொண்ட தொகுதியாக கருதப்படும் புந்தோங் பகுதி இந்திய தொழில்முனைவர் நகரமாக உருவாக்கம் காண வேண்டும் என்பதே எனது அவா. இந்தியர்களின் பாரம்பரிய, கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் வகையில் 'தொழில் நகரமாக' புந்தோங் பகுதி வளர்ச்சி காண வேண்டும் என்ற அடிப்படை நோக்கத்தை தாம் கொண்டுள்ளதாக புந்தோங் தொகுதி மைபிபிபி ஒருங்கிணைப்பாளர் டத்தோ நரான் சிங் வலியுறுத்தினார்.

'புந்தோங்' என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவது 'கச்சான் பூத்தே'
(கடலை) தான். 'கச்சான் பூத்தே' வியாபாரம் ஒரு மிகப் பெரிய வர்த்தகத்தைக் கொண்டுள்ள நிலையில் அதனை உள்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யக்கூடிய ஒரு மிக வர்த்தகத் துறையாக உருவாக்கப்பட வேண்டும்.

புந்தோங் பகுதியில் உள்ள மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்த இடம் ஒரு 'தொழில் நகரமாக' உருவாக்கம் பெற வேண்டும். வேலை இல்லா திண்டாத்தினால் இங்குள்ள மக்கள் பல்வேறு வழிகளில் பாதிக்கப்படுகின்ற சூழலில் அதற்கு நிரந்தர தீர்வு காண இத்தகைய நடவடிக்கையே சிறந்த நடைமுறையாகும்.

இங்குள்ள இந்தியர்களின் வாழ்வாதாரத்தை நிலைநிறுத்தக்கூடிய வகையில் 'புந்தோங்' பகுதி புதிய நகரமாக உருவாக்கம் பெற வேண்டுமானால் மக்களின் பிரதிநிதியாக நான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் புந்தோங் தொகுதியில் தேசிய முன்னணி சார்பில்  போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டு மக்கள் பிரநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் நிச்சயம் புந்தோங் பகுதியை மாற்றியமைப்பேன் என
'பாரதம்' மின்னியல் ஊடகம் மேற்கொண்ட நேர்காணலின்போது டத்தோ நரான் சிங் விவரித்தார்.

டத்தோ நரான் சிங்குடனான விரிவான நேர்காணல் நாளை முதல் 'பாரதம்' மின்னியல் ஊடகத்தில் இடம்பெறும்.

No comments:

Post a Comment