Monday 19 February 2018

ஈரான்: மலையில் மோதி விமானம் விபத்து; 66 பயணிகள் பலி



தெஹ்ரான் -
ஈரானில் உள்நாட்டு பயணிகள் விமானம் ஒன்று மலையில் மோதி விபத்துக்குள்ளானதில் 66 பயணிகள் உட்பட 72 பேர் பலியாகினர்.

ஈரானில் மூன்றாவது மிகப் பெரிய விமான நிறுவனமான ஆசிமென் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான ஏடிஆர் 72 என்ற பயணிகள் விமானம் ஒன்று உள்நாட்டு நேரப்படி இன்று காலை 5.00 மணியளவில் தெஹ்ரானிலிருந்து யாசூஜ் நோக்கி பயணித்தது.

இந்த விமானத்தில் 66 பயணிகள் உட்பட 6 விமானப் பணியாளர்களும் இருந்தனர். விமானம் புறப்பட்ட 20 நிமிடங்களிலேயே ராடார் தொடர்பை இழந்த நிலையில் சாக்ரோஸ் மலையில் மோதி விபத்துக்குள்ளானது தெரிய வந்துள்ளது.

விமானத்தை அவசரமாக தரையிறக்க விமானி முயற்சித்ததாகவும் அந்த முயற்சி பலனளிக்காமல் விமானம் மலையில் மோதி விபத்துக்குள்ளானதாகவும் நேரில் பார்த்த ஒருவர் கூறியுள்ளார்.

இந்த விமானத்தில் பயணம் செய்தவர்களின் பட்டியல், விமானிகளின் புகைப்படங்களை ஆசிமென் ஏர்லைன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக மீட்பு நடவடிக்கையில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment