Sunday 4 February 2018

'முகமட் ரிடுவானை கண்டுபிடிப்போருக்கு வெ.5,000 சன்மானம்' நிலைநிறுத்தப்பட்டுள்ளது- மஇகா இளைஞர் பிரிவு


கோலாலம்பூர்-
திருமதி இந்திரா காந்தியின் முன்னாள் கணவர் முகமட் ரிடுவான் அப்துல்லாவை கண்டுபிடித்து தருவோருக்கு 5,000 வெள்ளி சன்மானம் வழங்கப்படும் என்ற மஇகா இளைஞர் பிரிவின் அறிவிப்பு நிலைநிறுத்தப்பட்டுள்ளது அதன் செயலாளர் அர்விந்த்குமார் தெரிவித்தார்.

2009ஆம் ஆண்டு ஒருதலைபட்மாக தனது மூன்று பிள்ளைகளை இஸ்லாத்திற்கு மதமாற்றம் செய்ததோடு  9 மாத குழந்தையான பிரசன்னா டிக்‌ஷாவை தன்னோடு தூக்கிச் சென்ற முகமட் ரிடுவானை கண்டுபிடிக்கும் முயற்சியில் களமிறங்கிய மஇகா இளைஞர் பிரிவு, அவரை கண்டுபிடிப்போருக்கு 5,000 வெள்ளி சன்மானம் வழங்கப்படும் என கடந்த 2016ஆம் ஆண்டு அறிவித்தது.

அந்த அறிவிப்பு இன்னும் நடைமுறையில் உள்ளது என உறுதிபடுத்திய அர்விந்த்குமார், முகமட் ரிடுவானை கண்டுபிடிப்போருக்கு 5,000 வெள்ளி சன்மானம் வழங்கப்படும் என கூறினார்.

மூன்று பிள்ளைகளை ஒருதலைபட்சமாக மதமாற்றம் செய்தது செல்லாது எனவும் இவர்களின் மதமாற்றம் உடனடியாக ரத்து செய்யப்படுவதாகவும் கடந்த திங்கட்கிழமை கூட்டரசு நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment