Wednesday 14 February 2018

வசந்தபிரியா விவகாரம்; தடயவியல் நிபுணர்களின் அறிக்கைக்காக போலீஸ் காத்திருக்கிறது- டத்தோ தெய்வீகன்


புத்ராஜெயா-
பினாங்கு, நிபோங் தெபால் இடைநிலைப்பள்ளியில் ஆசிரியர் ஒருவரின் கைத்தொலைபேசியை திருடியவரை அடையாளர் காணும் பொருட்டு சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியின் தடயவியல் அறிக்கைக்காக காத்துக் கொண்டிருப்பதாக மாநில போலீஸ் படைத் தலைவர் டத்தோ அ.தெய்வீகன் கூறினார்.

தற்கொலைக்கு முயன்று மரணத்தைத் தழுவிய இரண்டாம் படிவ மாணவி வசந்தபிரியா தான் சிசிடிவி கேமரா பதிவில் உள்ளார் என்பதை போலீஸ் உறுதி செய்யவில்லை.

'நாங்கள் இன்னும் எதனையும் உறுதி செய்யவில்லை, அந்த பதிவில்  இடம்பெற்றுள்ள காட்சி  தெளிவாக இல்லாததால் உறுதி செய்வது கடினமாக உள்ளது'.

'நிபுணத்துவம் வாய்ந்த தடயவியல் நிபுணர்கள் அந்த காட்சியை மேம்படுத்தி உதவும் வரை நாங்கள் காத்திருக்கிறோம்' என அவர் கூறினார்.

அந்த காட்சி பதிவு எப்போது தடயவியல் நிபுணர்களிடம் ஒப்படைக்கப்படும் என கேட்கப்பட்டபோது, அது ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றார் டத்தோ தெய்வீகன்.

கடந்த ஜனவரி 24ஆம் தேதி ஆசிரியர் ஒருவரின் கைப்பேசி களவு போனது தொடர்பில்  விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட மாணவி வசந்தபிரியா, தற்கொலைக்கு முயன்று சிகிச்சை பலனளிக்காமல் கடந்த 1ஆம் தேதி மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment