Thursday 22 February 2018

எரிமலை சீற்றம்; மலேசியாவில் வைரஸ் காய்ச்சல் பரவலா?- ஆதாரமற்ற குற்றச்சாட்டு- அமைச்சர்



கோலாலம்பூர்-
இந்தோனேசியாவில் சினாபுங் எரிமலை கடுமையான சீற்றத்துடன் வெடித்து புகை, சாம்பலை வெளியிட்டுக் கொண்டிருக்கும் நிலையில் அதனால் மலேசியாவில் வைரஸ் காய்ச்சல் பரவும் என வெளியாகியுள்ள தகவலில் உண்மையில்லை என இயற்கை வள, சுற்றுச்சூழல் அமைச்சர் டத்தோஶ்ரீ ஹாஜி வான் ஜுனாய்டி துங்கு ஜபார் தெரிவித்தார்.

கடந்த 19ஆம் தேதி வெடித்து சிதற தொடங்கிய இந்த எரிமலை சீற்றத்தினால் மலேசியாவில் காற்று தூய்மைக்கேடு ஏற்படும் என தகவல் பகிரப்பட்டு வருகிறது.

சினாபுங் எரிமலை சீற்றத்தினால் வெளியாகும் புகையின் மூலம் மலேசியாவில் வைரஸ் காய்ச்சல் பரவும் என்பது 'ஆதாரமற்ற, அடிப்படையற்ற குற்றச்சாட்டு' என அவர் சொன்னார்.

அளவுக்கதிகமான வெப்பத்தை கொண்டுள்ள எரிமலை குழம்பு, சாம்பலில் வைரஸ் கிருமிகள் உயிர் வாழ முடியாது என்பதை சுகாதார அமைச்சு உறுதிபடுத்தியுள்ளது.

தற்போது மலேசியாவின் அசாதாரண வானிலை நிலவுவதால் நோய் ஏற்படுவது சாதாரண ஒன்றுதான் என குறிப்பிட்ட அவடர், இது எரிமலை வெடிப்புக்கு முன்பு நிலவுவது ஆகும்.

இத்தகைய சூழலில் காய்ச்சலை தடுக்க மலேசியர்கள் அதிகளவு தண்ணீர் குடிப்பது, உடற்பயிற்சி செய்வது, போதுமான ஓய்வு பெறுவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும் என டத்தோஶ்ரீ வான் ஜுனாய்டி தெரிவித்தார்.

No comments:

Post a Comment