Tuesday 20 February 2018
பழுதடைந்தது லங்காவி கேபிள் கார்; 88 பயணிகள் அந்தரத்தில் தொங்கினர்
லங்காவி-
லங்காவி கேபிள் கார் சேவையில் ஏற்பட்ட பழுதை தொடர்ந்து 'மச்சிங்சாங்' மலையில் சிக்கி தவித்த பயணிகள், ஊழியர்கள் உட்பட 1,126 பேரை பத்திரமாக மீட்கப்பட்டனர்.
நேற்று மாலை 5.48 மணியளவில் மிகவும் பிரசித்தி பெற்ற 'லங்காவி ஸ்கைகேப்' எனப்படும் கேபிள் கார் சேவையை பயன்படுத்தி 88 பேர் மலை ஏறியும், இறங்கியும் கொண்டிருந்தனர்.
அப்போது கேபிள் காரின் 'பேரிங்கில்' பழுது ஏற்பட்டதை தொடர்ந்து 88 பயணிகளும் அந்தரத்தில் தொங்கினர்.
இந்த கேபிள் காரை நிர்வகித்து வரும் பனோராமா லங்காவி சென்.பெர். கூறுகையில், கடல் மட்டத்திலிருந்து 708 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள 2.2 கிலோ மீட்டரை உள்ளடக்கிய இந்த கேபிள் காரின் பழுதை சரி செய்ய 5 மணி நேரம் ஆனது.
16 பெட்டிகளில் சிக்கி தவித்த 88 பயணிகளை தீயணைப்பு, மீட்புப் படையினர் இரவு 9.50 மணியளவில் மீட்டனர்.
மேலும், கேபிள் கார் சேவையில் ஏற்பட்ட பழுதை நிறுவனத்தின்
தொழில்நுட்பக் குழுவினர் சரி செய்தனர்.
அனைத்து பயணிகளும் இரவு 11.00 மணியளவில் பத்திரமாக கீழ் தளத்திற்கு அழைத்து வரப்பட்டனர் என கூறிய நிறுவனம், கேபிள் பெட்டியில் சிக்கிய பயணிகளை தவிர்த்து நடுத்தர நிலையத்தில் 210 பயணிகளும் 36 ஊழியர்களும் மேல்தள நிலையத்தில் 750 பயணிகளும் 42 ஊழியர்களும் இருந்த நிலையில் அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர் என அந்நிறுவனம் மேலும் தெரிவித்தது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment