Tuesday 6 February 2018

வசந்தபிரியா விவகாரம்; உணவருந்தவும் கழிவறைக்கு செல்லவும் அனுமதி மறுப்பதைதான் 'சட்டம்' வலியுறுத்துகிறதா?


புனிதா சுகுமாறன்
ஈப்போ:
மாணவி வசந்தபிரியா தற்கொலை மரணம் தொடர்பில் பல்வேறு தரப்பினர் தங்களது கருத்துகளையும் பதிவு செய்து வருகின்றனர். இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியை மட்டுமல்லாது  கல்வி அமைச்சியையும் பல்வேறு தரப்பினர் குறை கூறியும் கேள்வியும் எழுப்பி வருகின்றனர்.

ஆசிரியர் ஒருவரின் கைத்தொலைபேசி திருடியதாக மாணவி வசந்தபிரியாவை மூன்று ஆசிரியர்கள் விசாரித்துள்ளனர். பிற்பகல் 2.00 மணி முதல் பள்ளி முடிவடையும் நேரம் வரை மாணவி வசந்தபிரியாவை தனி அறையில் அடைத்து அவர்கள் விசாரித்துள்ளதாக தெரிகிறது.

மாணவிதான் தொலைபேசியை எடுத்தாரா? என்பதெ கேள்விக்குறியாக உள்ள நிலையில் ஒரு மாணவி தவறு செய்திருந்தால் அவரை விசாரிக்கும் பொறுப்பு ஒழுங்கு நடவடிக்கை ஆசிரியர் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டு அம்மாணவிதான் தவறு செய்துள்ளார் என்பதை உறுதிப்படுத்தப்பட்ட பிறகே அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

ஆசிரியரின் கைத்தொலைபேசியை அம்மாணவிதான் எடுத்துள்ளார். அதற்கான சிசிடிவி கேமரா பதிவு ஆசிரியரிடம் உள்ளது. மாணவியின் தரப்பில் வழக்கு தொடுத்தால் மட்டுமே அந்த கேமரா பதிவை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும் என கூறப்படுவது 'கண் கெட்டப்பிறகு சூரியநமஸ்காரம் செய்வதற்கு சமம்' ஆகும்.

மாணவி வசந்தபிரியா விவகாரத்தில் அவர் கடுமையாக விசாரிக்கப்பட்டுள்ளதோடு மூன்றாவது தரப்பினரின் தலையீடானது துளியளவும் ஏற்க முடியாததாகும்.

ஆசிரியரின் கணவர் இவ்விகாரத்தில் எதற்காக தலையிட வேண்டும் என கேள்வி எழுப்பும் சிலர்,  வேதனை தரும் அளவுக்கு விசாரித்திருந்தாள் அம்மாணவி தற்கொலை முயற்சிக்கு தள்ளப்பட்டிருப்பார் என்பது தெள்ளதெளிவாக தெரிகிறது

இவ்விவகாரத்தில்  இன்னமும் ஆசிரியரின் கணவர் தண்டிக்கப்படாததன் காரணம் என்ன?

ஒரு மாணவி தவறே செய்திருந்தாலும் அவருக்கு உண்ண  உணவு கொடுக்காமலும், கழிவறைக்கு செல்லவிடாமலும் தண்டிக்கும் சட்டம் எப்போது வந்தது?

இன்று அந்த மாணவியின் இழப்புக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பாடாமல் இருப்பதன் மர்மம் என்ன? இத்தனை கேள்விகள் உள்ளடங்கிய வசந்தபிரியாவிற்கு நேர்ந்த கொடுமை பிறருக்கு நேராது என்பதற்கு என்ன உத்தரவாதம்?

மேற்கூறப்பட்ட விவகாரத்தில் ஆசிரியர், அவர் கணவர் தண்டிக்கப்பட வேண்டும். இவர்கள் அரசாங்கப் பணிகளிலிருந்து  நீக்கப்பட வேண்டும்,  கல்விஅமைச்சு விரைவில் தீவிர நடவடிக்கைகளை சம்பந்தப்பட்டவர்கள் மீது எடுக்கவேண்டும், அதை விடுத்து தற்காலிக மாற்றம் செய்வது என்பது குற்றவாளியை இன்னும் குற்றம் செய்வதற்கு தூண்டுவதற்க்கு சமம் ஆகும்.

இன்னொரு 'வசந்தபிரியாவை' கல்வி அமைச்சு  உருவாக்கி விடக்கூடாது என சமூக பயனர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிபடுத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment