Wednesday 14 February 2018

வகுப்பறைகளில் கைப்பேசி பயன்பாடு; கல்வி அமைச்சு நேரடி தடை விதிக்கவில்லை - கல்வி துணை அமைச்சர்


சிரம்பான் -
ஆசிரியர்கள் வகுப்பறையில் கைப்பேசியை பயன்படுத்துவதற்கு கல்வி அமைச்சு நேரடி தடை விதிக்கவில்லை என கல்வி துணை அமைச்சர் டத்தோ சோங் சின் ஹூன் தெரிவித்தார்.

தனிபட்ட காரணங்களுக்காக ஆசிரியர்கள் தங்களது கைப்பேசிகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

வகுப்பறைகளில் கைப்பேசியை பயன்படுத்தவும், பயன்படுத்தக்கூடாது எனவும் ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சு  நேரடி தடை விதிக்கவில்லை, ஆனால் ஆசிரியர்கள் எவ்வாறு கைப்பேசிகளை பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்துள்ளனர் என்பதை உணர்கின்றோம். பாட நேரத்தின்போது தேவையில்லாத விவகாரங்களுக்கு கைப்பேசிகளை அவர்கள் பயன்படுத்துவதில்லை' என உலு தியாமிங்கில் நடைபெற்ற சீனப் பெருநாள் கொண்டாட்ட நிகழ்வின்போது அவர் இவ்வாறு கூறினார்.

 ஆசிரியர்கள் வகுப்பறைகளில் கைப்பேசியை பயன்படுத்தவும் எடுத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கடந்த 6ஆம் தேதி கல்வி துணை அமைச்சர் டத்தோ ப.கமலநாதன் கூறியிருந்தார்.

பள்ளிகளுக்கு அவர்கள் கைப்பேசியை எடுத்துச் செல்லலாம். ஆனால் பாட நேரத்தின்போது வகுப்பறையில் கைப்பேசியை பயன்படுத்தக்கூடாது என அவர் தெரிவித்திருந்தார்.

No comments:

Post a Comment