Wednesday 7 February 2018

தாரணியை கொன்ற ஆடவர் 7 நாட்களுக்கு தடுத்து வைப்பு



பெட்டாலிங் ஜெயா-
இளம் பெண் டி.தாரணியை கொன்று போலீசில் சரணடைந்த ஆடவர் ஒரு வாரத்திற்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பெட்டாலிங் ஜெயா ஓசிபிடி துணை ஆணையர் முகமட் ஸானி  தெரிவித்தார்.

37 வயது மதிக்கத்தக்க ஆடவர் இன்று காலை பெட்டாலிங் ஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வேளையில் அவருக்கான தடுப்புக் காவல் நிர்ணயிக்கப்பட்டது.

ஏழு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவ்வாடவரிடம் முழுமையான  விசாரணை மேற்கொள்ளப்படும் என அவர் சொன்னார்.

திருமண விருப்பத்தை நிராகரித்ததே இக்கொலைக்கான நோக்கமாக இருக்கலாம் என கூறிய முகமட் ஸானி, 'கொலையுண்ட அப்பெண்  அவ்வாடவரின் திருமணம் விருப்பத்தை நிராகரித்ததோடு வேறொருவரை  திருமணம் செய்ய விரும்பினார்'.

இந்த மரணத்திற்கான காரணத்தை கண்டறிய பிரேத பரிசோதனை முடிவுக்காக போலீஸ் காத்திருக்கிறது என அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஓர் பெண்ணை கொன்று அவரின் உடலை காரில் கிடத்தி டாமன்சாரா போலீஸ் நிலையத்தில் சரணடைந்த ஆடவரை பின்னர் போலீசார் கைது செய்தனர்.

No comments:

Post a Comment