Friday, 2 February 2018
பல்லாயிரக்கணக்கான மக்களின் பக்தி பரவசத்துடன் ஈப்போ கல்லுமலை தைப்பூச விழா
புனிதா சுகுமாறன்
ஈப்போ :
ஈப்போ கல்லுமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தின் தைப்பூச விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது
பக்தர்கள் விதவிதமான வண்ண காவடிகள் ஏந்தி வந்து முருகப் பெருமானுக்கு தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர்
அதேவேளையில் நேற்று சந்திர கிரகணம் என்பதால் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை கொளுத்தும் வெயில் என பாராமலும் காவடிகலை ஏந்தி நேர்த்திக்கடனைச் செலுத்தினர்
மேலும் கடுமையான வெயிலில் வரும் பக்தர்களின் பசி, தாகத்தை போக்க அரசியல் கட்சிகளும் மோர்,குளிர்பானம்,உணவுகளை வழங்கினர்.
இந்த தைப்பூச விழாவில் ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன், பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வீ,சிவகுமார், பேராக் மாநில காவல்துறையின் துணை அதிகாரி உட்பட பல்லாயிரக்கணக்கான மக்களும் கலந்துக்கொண்டார்.
இதனிடையே, இன்று ஈப்போ கல்லுமலை ஆலயத்திலிருந்து புறப்பட்ட \ரதம் ஈப்போ வட்டாரத்தை வலம் வந்தது.
பேராக் மாநில மந்திரி பெசாரின் சிறப்பு ஆலோசகர் டத்தோ வ.இளங்கோ, பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மா ஹங் சூன் ஆகியோர் ரத வெள்ளோட்டத்தின் போது சிறப்புப் பிரமுகர்களாக கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment