சுங்கைப்பட்டாணி-
தைப்பூச விழாவை முன்னிட்டு கெடா, சுங்கைப்பட்டாணி, ஶ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தின் ரத வெள்ளோட்ட நிகழ்வின் போது வாணவேடிக்கை வெடித்து 15 பேர் படுகாயம் அடைந்தனர்.
சில இளைஞர்கள் வாண வேடிக்கை கொளுத்தியபோது அதை வேடிக்கை பார்த்த பொதுமக்கள் கூட்டத்தின் மத்தியில் வாண வேடிக்கை வெடித்ததில் இவர்கள் தீப்புண் காயங்களுக்கு இலக்காகினர்.
படுகாயம் அடைந்த மக்களை அருகிலுள்ள சுல்தான் அப்துல் ஹலிம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
No comments:
Post a Comment