நிபோங் தெபால்-
தற்கொலைக்கு முயன்று சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்த மாணவி வசந்தபிரியாவின் இறுதி ஊர்வலம் மாணவ- மாணவியரின் அணிவகுப்புடன் நடைபெற்றது.
நிபோங் தெபாலில் உள்ள வசந்தபிரியாவின் வீட்டில் நடைபெற்ற இறுதி காரியங்களுக்கு பின்னர் பிற்பகல் 3.30 மணியளவில் ஜாவி, கம்போங் தொங் ஹாய் மயானத்தில் வசந்தபிரியாவின் நல்லுடல் தகனம் செய்யப்பட்டது.
இதற்கு முன்னதாக வசந்தபிரியாவின் நல்லுடலுக்கு அரசியல் தலைவர்கள், பொது இயக்கங்களின் தலைவர்கள், பிரதிநிதிகள், உறவினர்கள், பள்ளி மாணவர்கள் என ஆயிரக்கணக்கானோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
நிபோங் தெபாலில் உள்ள இடைநிலைப்பள்ளியில் பயின்ற மாணவி
வசந்தபிரியாவின் இறுதி ஊர்வலத்தில் சக பள்ளி மாணவர்- மாணவிகள் பங்கு கொண்டு அணிவகுத்துச் சென்றனர்.
No comments:
Post a Comment