Saturday 3 February 2018

தடை செய்யப்பட்ட ரசாயன கலவைகள் கொண்ட உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்படும்- அமைச்சர்

செலாமா-
சந்தைகளில் விற்கப்படும் விஷத்தன்மை, தடை செய்யப்பட்ட ரசாயனக் கலவைகளை கொண்டுள்ள உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என உள்நாட்டு வாணிப, பயனீட்டாளர், கூட்டுறவு அமைச்சர் டத்தோஶ்ரீ ஹம்சா ஸைனுடின் தெரிவித்தார்.

பயனீட்டாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத, சுகாதார அமைச்சு நிர்ணயித்துள்ள தர கட்டுப்பாடுகளை கொண்டிராத பொருட்கள் உறுதிபடுத்தப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.

"தவறுகள் நிகழுமேயானால் உணவு நிறுவன உரிமையாளர் மீது கடுமையான நடவடிக்கை அமைச்சு மேற்கொள்ளும்".

"முன்பு போலி பால் மாவு விவகாரம் எழுந்தபோது அதனை சுகாதார அமைச்சுக்கு அனுப்பி உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என சுங்கை பயோர் இடைநிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தபோது அவர் இவ்வாறு கூறினார்.

மேலும், காபி கலவை விவகாரம் குறித்து பேசிய அவர், அந்த காபி கலவை உட்கொண்ட சிலர் உடல் சோர்ந்தும், மயக்கமான நிலையிலும் பினாங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அந்த காபி கலவையை ஆய்வுக்கு உட்படுத்தியதில் அதில் தடை செய்யப்பட்ட ரசாயனம் கலக்கப்பட்டுள்ளது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

பயனீட்டாளர்களின் உயிருக்கும் பாதுகாப்புக்கும் மருட்டலாக இருக்கும்
இதுபோன்ற விவகாரத்தை அமைச்சு கடுமையாக கருதுவதாக லாருட் நாடாளுமன்ற உறுப்பினருமன டத்தோ ஹம்சா ஸைனுடின் தெரிவித்தார்.

No comments:

Post a Comment