Friday, 2 February 2018

வசந்தபிரியா மரணம்; 'ஆசிரியை மீது நடவடிக்கை எடுங்கள்' - உறவினர் வேண்டுகோள்


நிபோங் தெபால்-
இடைநிலைப்பள்ளி மாணவி வசந்தபிரியா மரணத்திற்கு நீதி வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது போலீசார் உடனடி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்.

ஆசிரியர் ஒருவரின் கைத்தொலைபேசி களவு போன விவகாரம் தொடர்பில் சம்பந்தப்பட்ட மாணவியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அதிருப்தி கொண்டதால் தற்கொலைக்கு முயன்ற அம்மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை மரணமடைந்தார்.

கைதொலைபேசி களவு போனது தொடர்பில் அம்மாணவியை உணவருந்தவும் கழிவறைக்கு செல்லவும் அனுமதிக்காமல் மனரீதியாக தொல்லை கொடுத்துள்ள சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என அப்பெண்ணின் உறவினர் ஆர்.மனோகரன் (40) செபெராங் ஜெயா மருத்துவமனை சவக்கிடங்கில் செய்தியாளர்களிடம் பேசுகையில் கேள்வி எழுப்பினார்.

வசந்தபிரியாவின் மரணத்திற்கு சம்பந்தப்பட்ட ஆசிரியையே முழு பொறுப்பு என கூறிய அவர், அந்த ஆசிரியை மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இம்மரணத்தில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment